என்னமோ நடக்குது, அச்சமின்றி ஆகிய படங்களில் உதவியாளராக பணியாற்றிய வள்ளிமுத்து என்பவரின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பார்த்திபன் காதல் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.

படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது,‘வழக்கமான காதல் கதை. உண்மை சம்பவங்களின் பின்னணியில் யதார்த்தமான காதல் கதையாக திரைக்கதை அமைத்திருக்கிறோம். படத்தின் உச்சக்கட்ட காட்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மேலாக இருக்கும்.

காதலுக்கு அனைவரும் ஆதரவளிப்போம். ஆனால் அந்த காதல் எம்முடைய இல்லங்களில் புகுந்தால் அதனை எதிர்ப்போம். இந்நிலை ஏன்? இதன் பின்னணி குறித்து சுவராசியமான திரைக்கதையுடன் இந்த பார்த்திபன் காதலை தொடங்கியிருக்கிறோம்.

இந்த படத்தில் புதுமுக நாயகன் யோகி ஓவிய கல்லூரியில் பயிலும் மாணவராகவும், நாயகி வர்ஷிதா கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவியாகவும் நடித்திருக்கிறார்கள்.’ என்றார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி இணையத்தில் பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது.