41 வயது நபர் ஒருவர் 11 சிறுமியை திருமணம் செய்த சம்பவம் மலேசியாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியின் பெற்றோருடைய சம்மதத்துடன் இந்த திருமணம் இடம்பெற்றுள்ளது.

41 வயது மணமகன் சிறுமியுடன் கரம்கோர்த்தபடி காணப்படும் திருமணப்புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட நபர் ஏற்கனவே இரண்டுதடவை திருமணம் செய்தவர் எனவும் அவரிற்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர் எனவும் உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறுமியை மணமுடித்த நபர் ஓரளவு பணவசதி உள்ளவர் சிறுமியின் குடும்பத்தவர்கள் இறப்பர் தோட்டமொன்றில் வேலை பார்க்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

யுனிசெவ் அமைப்பு இந்த திருமணத்தை கடுமையாக கண்டித்துள்ளது.இது அதிர்ச்சிதருகின்றது ஏற்றுக்கொள்ள முடியாதது என யுனிசெவ் தெரிவித்துள்ளது

பதினொரு வயது சிறுமியை மணமுடிப்பது பாலியல்துஸ்பிரயோகத்திற்கு சமமானது என மனித உரிமை ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் இவ்வாறு சிறுவயதில் திருமணம் செய்த சுமார் 15,000 சிறுமிகள் உள்ளனர் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த திருமணம் இடம்பெற்றமைக்கான ஆவணங்கள் எதுவுமில்லை என தெரிவித்துள்ள மலேசிய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது