மெக்ஸிக்கோவின் ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி வேட்பாளரான  ஆன்டரஸ் மனுவேல் லோபஸ் ஓப்ரடோர் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வாக்குப் பதிவில் முன்னாள் மெக்ஸிகோ நகர மேயரான இவர் 53 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மெக்ஸிக்கோ அரசியல் வரலாற்றில் கடந்த நூற்றாண்டின் பெரும் பகுதியை, ஜோஸின் நிறுவன புரட்சிகர கட்சியே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், அதன் புகழ் குறைந்துவிட்டது.

இந்நிலையில், லோபஸிற்கு அடுத்த இடத்தில், பழமைவாத தேசிய செயல் கட்சியின் வேட்பாளர் ரிகார்டோ அனயா உள்ளார்.

மெக்ஸிகோவின் அடுத்த ஜனாதிபதியாகவிருக்கும் 64 வயதான ஓப்ரடோருக்கு வெனிசுலாவின் ஜனாதிபதி, நிக்கலஸ் மக்ரோ, பொலிவிய ஜனாதிபதி எவோ மொரேல்ஸ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

அத்துடன் இந்த தேர்தலுக்காக 130 க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.