இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்

Published By: Digital Desk 4

02 Jul, 2018 | 02:16 PM
image

'ஓவியா' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'அள்ளிக்கொள்ளவா' எனும் பாடலை இசையமைத்ததற்காக இலங்கை அரசின் 'சிறந்த இசையமைப்பாளர்' எனும் தேசிய விருதை இசையமைப்பாளர் சிவா பத்மஜன் பெற்றார்.

இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘ஓவியா’. புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்திற்கு சிவா பத்மஜன்   இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார்.

காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ' ஓவியா'வாக நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'அள்ளிக்கொள்ளவா' எனும் பாடலுக்காக படத்தின் இசையமைப்பாளரான சிவா பத்மஜன் அவர்களுக்கு இந்த வருடத்திற்கான 'சிறந்த இசையமைப்பாளர்' விருது  இலங்கை அரசிடம் இருந்து கிடைத்துள்ளது. விஜய் டிவியின் சூப்பர் சிங்கரில் வெற்றியாலரான ஆனந்த் அரவிந்தக்ஷன் இந்த பாடலை பாடியுள்ளார்.

ஜூன் 22 இல் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், இலங்கையின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் கலைத்துறை அமைச்சர் எஸ்.பி.நவய்நெ (S.B.Nawwine) அவர்கள்  'சிறந்த இசையமைப்பாளர்' விருதை இசையமைப்பாளர்  சிவா பத்மஜன் அவர்களுக்கு வழங்கினார்.

இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03