(இரோஷா வேலு) 

கொழும்பில் இருவேறு பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பெண்களை நேற்று கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் பொரள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டீ.20 தோட்டம், பஸ்தியன் மாவத்தையில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் 10.140 மில்லிகிராம் ஹெரோயினுடன் 50 வயதுடைய பெண் ஒருவரையும், மோதரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரன்தியஉயன குடியிருப்பு பகுதியில் வைத்து 2.40 மில்லிகிராம் ஹெரோயினுடன் 45 வயதுடைய பெண் ஒருவரையும், 2.30 மில்லிகிராம் ஹெரோயினுடன் அதேபகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரையுமே இவ்வாறு கைதுசெய்துள்ளனர்.