(எம்.சி.நஜி­முதீன்)

நாட்­டுக்கு சுதந்­திரம் கிடைத்­தது முதல் தற்­போது வரையில் உரு­வா­கிய அர­சியல் தலை­வர்­களில் பயங்­க­ர­வாதம் மற்றும் மோச­டிக்கு எதி­ராக உரிய முறையில் போராட்டம் நடத்தி ஜன­நா­யகத்­ததை நிலைநாட்­டிய ஒரே தலைவர் மஹிந்த ராஜ­ப­க்ஷதான். அவர் ஏற்­ப­டுத்­திய சமா­தா­னத்­தையும் ஜன­நா­ய­கத்­தையும் தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் சீர்­கு­லைத்து வரு­கின்­றனர். நாட்டில் தற்­போது “ஜம்பர்” ஜன­நாயகம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனவே மஹிந்த ராஜ­பக்ஷ நாட்டில் ஏற்­ப­டுத்­திய சமா­தா­னத்­தையும் ஜன­நா­ய­கத்­தையும் வேறு எவ­ராலும் தொடர்ந்து முன்­னெ­டுத்துச் செல்ல முடி­யாது. ஆகவே விரைவில் நாம் நல்­லாட்சி அர­சாங்­கத்தை கவிழ்ப்போம் என முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தபாய ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

“எலிய” அமைப்பு ஏற்­பா­டு­செய்த புத்­தி­ஜீ­விகள் சந்­திப்பு நேற்று கலே­வ­லயில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார். 

அவர்  அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

முன்­னைய ஆட்­சியின் போது சர்­வ­தேச நாணய நிதியம்,உலக வங்கி உள்­ளிட்ட ஏனைய சர்­வ­தேச அமைப்­பு­க­ளி­ட­மி­ருந்து  கடன் பெறாது ஏன் சீனா­வி­ட­மி­ருந்து கடன் பெற வேண்டும் என எம்­மீது சிலர் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கின்­றனர். எனினும் அதற்­கான பதிலை தற்­போது நாட்டு மக்கள் அறிந்­து­கொண்­டுள்­ளனர். ஏனெனில் சர்­வ­தேச நாணய நிதியம் மற்றும் உலக வங்­கி­யி­ட­மி­ருந்து கடன் பெற்­ற­மை­யினால் அவ்­வ­மைப்­புகள் நிபந்­த­னைகள் விதித்து நாட்டின் மீது அழுத்தம் பிர­யோ­கிக்­கின் ­றன. 

அவ்­வ­மைப்­புகள் நாட்டில் விவ­சா­யத்­து­றைக்கு முக்­கி­யத்­துவம் வழங்­கத்­தே­வை­யில்லை என ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளன. சர்­வ­தேச ஆலோ­ச­கர்கள் எமது நாட்டின் தேசி­யத்­து­வ­த்தின் முக்­கி­ய­த்­துவம், கலா­சாரம், பாரம்­ப­ரியம் என்­பன தெரி­யாத நிலையில் இவ்­வா­றான ஆலோ­ச­னை­களை வழங்­கு­கின்­றனர். நாம் உல­க­ளா­விய பொரு­ளா­தா­ரத்­துடன் ஒன்­றித்து பய­ணிக்க வேண்­டிய அதே நிலையில் தேசிய தொழில்­க­ளையும் மறந்­து­விட முடி­யாது.

எனவே இவ்­வா­றான பிரச்­சினை நாட்டில் இருக்கும் நிலையில் ஆட்­சி­யா­ளர்கள்  எதிர்­த­ரப்­பி­னரை அடக்­கு­வ­தற்கு மாத்­திரம் தமது கவ­னத்தை செலுத்­தி­யுள்­ளனர். அதனால் நாடும் பொரு­ளா­தா­ரமும் வீழ்ச்சி கண்­டுள்­ளது.  இவ்­வா­றான நிலையில் அர­சாங்கம் ஜன­நா­யகம் பற்றி பேசு­கி­றது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் மீண்டும் ஆட்­சிக்கு வந்தால் தாங்கள் ஏற்­ப­டுத்­தி­யுள்ள ஜன­நா­யகம் சீர்­கு­லைந்­து­விடும் எனக் குறிப்­பி­டு­கின்­றனர். 

எனினும் நாட்­டுக்கு சுதந்­திரம் கிடைத்­தது முதல் தற்­போது வரையில் உரு­வா­கிய அர­சியல் தலை­வர்­களில் பயங்­க­ர­வாதம் மற்றும் மோச­டிக்கு எதி­ராக உரிய முறையில் போராட்டம் நடத்தி ஜன­நா­யத்­ததை நிலை­நாட்­டிய ஒரே தலைவர் மஹிந்த ராஜ­ப­க் ஷதான் என்­பதை உறு­தி­யாகக் கூறிக்­கொள்ள முடியும்.

1987,88,89 ஆகிய காலப் பகு­தி­களில்  இடம்­பெற்ற மோச­டி­யினால் நாட்­டி­லுள்ள இளைஞர்,யுவ­திகள் பாதிக்­கப்­பட்­ட­போது அதற்­கெ­தி­ராக மஹிந்த ராஜ­பக் ஷ முன்­னின்று செயற்­பட்டார். அதேபோல் நாட்டில் 27 வருட கால­மாக எந்­த­வொரு ஜனா­தி­ப­தி­யி­னாலும் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது நாளுக்கு நாள் விஸ்­தீ­ர­ண­ம­டைந்து சென்ற பயங்­க­ர­வா­தத்தை  மூன்று வருட காலப்­ப­கு­திக்குள் துடைத்­தெ­றிந்து நாட்டில் சமா­தா­னத்தை கொண்டு வந்­த­வரும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷதான்.

யுத்த காலத்தில் அரச தலை­வர்கள் உட்­பட பாது­காப்பு துறை­யினர், பொது­மக்கள் என சகல வர்க்­கத்­தி­னரும் குண்டு வெடிப்பில் சிக்கி பலி­யா­கி­யுள்­ளனர். பஸ் வண்டி மற்றும் ரயிலில் பய­ணிக்க முடி­யாத நிலை­யி­ருந்­தது. ஏனெனில் அங்கும் குண்டு வெடிப்பு சம்­ப­வங்கள் பதி­வா­கி­யி­ருந்­தன. அத்­து­டன் வடக்­கிற்கு எந்­த­வொரு அர­சியல் தலை­வர்­க­ளி­னாலும் செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்­டி­ருந்­தது.  கிழக்கின் மூன்றில் இரண்டு பிர­தேசம் விடு­த­லைப்­பு­லி­களின் கட்­டுப்­பாட்டில் இருந்­தது.

கொழும்பு   நக­ரி­லுள்ள மத்­திய வங்கி, துறை­முகம், விமான நிலையம் உள்­ளிட்ட பொரு­ளா­தார மத்­திய நிலை­யங்­களும் சீர்­கு­லைக்­கப்­பட்­டன. தேரர்கள் கொல்லப்­பட்­டனர். கிழக்கில் பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. இவ்­வா­றான பயங்­க­ர­வாதம் நிலை­கொண்­டி­ருந்­த­போது நாட்டில் சமா­தானம் இருக்க முடி­யுமா? ஜன­நா­யகம் இருக்க முடி­யுமா?  எனவே அவ்­வா­றான நெருக்­க­டி­மிக்க நிலையை இல்­லா­தொ­ழித்து நாட்டில் சமா­தானம் மற்றும் ஜன­நா­ய­கத்தை மஹிந்த ராஜ­ப­க் ஷவே ஏற்­ப­டுத்­தினார். 

மஹிந்த ராஜபக் ஷ ஏற்­ப­டுத்­திய சமா­தா­னத்­தையும் ஜன­நா­ய­கத்­தையும் தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் சீர்­கு­லைத்து வரு­கின்­றனர். நாட்டின் பாது­காப்பு சீர்­கு­லைந்து செல்­கின்­ற­தெனில் ஜன­நா­ய­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யுமா? மீண்டும் பயங்­க­ர­வாதம் தலை­தூக்­கு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­டு­கின்­ற­தென்றால் ஜன நா­யகத்தை பாது­காக்க முடி­யுமா?

தற்­போது நாள் ஒன்று விடி­வது ஏதா­வ­தொரு மர­ணத்தை பறை­சாற்­றிக்­கொண்­டாகும். அந்­த­ள­விற்கு பாதாள உலகக் குழுக்­களின் செயற்­பாடு அதி­க­ரித்­துள்­ளது. மஹிந்த ராஜ­பக் ஷ யுத்­தத்தை நிறை­வு­செய்த பின்னர் நாட்டில் அனை­வரும் சந்­தோ­ஷ­மாக வாழும் சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்தித் தந்தார்.பயங்­க­ர­வா­தத்தை நிறை­வுக்கு கொண்டு வந்த பின்னர் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்                                             ­டது.

தென் பகு­திபோல் வடக்கு, கிழக்­கிலும் அபி­வி­ருத்தித் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஜன­நா­ய­கத்தை உறு­தி­செய்­வ­தற்கே அவை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­கப்­பட்­டன. வெள்­ளை­யரின் ஆட்­சிக்குப் பின்னர் நாட்டில் ரயில் பாதைகள் அமைக்­கப்­பட்­டதும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் ஆட்­சி­யில்தான். வவு­னி­யா­வி­லி­ருந்து காங்­கே­சன்­து­றைக்கும், மத­வாச்­சி­யி­லி­ருந்து மன்­னா­ருக்கும் ரயில் பாதை அமைக்­கப்­பட்­டது.

எனினும் ஜன­நாயகம் பற்றிப் பேசும் நல்­லாட்சி அர­சாங்கம் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நீண்ட காலம் காலம் தாழ்த்­தி­யது. அதேபோல் தற்­போது மாகாண சபைத்­தேர்­தலை நடத்­தாது காலம் தாழ்த்தி வரு­கி­றது. மக்­களின் அபிப்­பி­ரா­யத்தை தெரி­விப்­ப­தற்கு இட­ம­ளிப்­பது ஜன­நா­ய­கத்தின் பிர­தான மூலக்­கூ­றாக உள்­ளது. எனினும் நல்­லாட்சி அர­சாங்கம் தேர்தல் நடத்­து­வ­தாக இல்லை.

எனினும் முன்­னைய ஆட்­சியில் சகல மாகா­ணங்­க­ளிலும் சகல தேர்­தல்­களும் உரிய காலத்­திற்கு முன்­ன­தா­கவே நடத்­தப்­பட்­டன. அத்­துடன் கிழக்கு மாகா­ணத்தில் முதல் தட­வை­யாக தேர்தல் நடத்­தப்­பட்­டது. வடக்­கிலும் தேர்தல் நடத்­தப்­பட்­டது. வட மாகாண சபைத் தேர்தல் நீதி­யான முறையில் நடை­பெ­ற­வேண்­டு­மானால் ஈ.பி.டி.பி., புளொட் மற்றும் கருணா அணி­யிடம் உள்ள ஆயு­தங்கள் களை­யப்­பட வேண்டும் என என்­னிடம் மஹிந்த ராஜ­பக் ஷ வேண்­டிக்­கொண்டார். எனவே தேர்­த­லுக்கு முன்னர் நாம் ஆயு­தங்­களைக் களைந்தோம்.

எனவே மஹிந்த ராஜ­பக் ஷ நாட்டில் ஏற்­ப­டுத்­திய சமா­தா­னத்­தையும் ஜன­நா­ய­கத்­தையும் வேறு எவ­ராலும் தொடர்ந்து முன்­னெ­டுத்துச் செல்ல முடி­யாது. இவர்கள் அதனை சீர­ழிக்­கின்­றனர்.  நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தது முதல் ஜன­நா­யக விரோத செயற்­பா­டுகள் பல­வற்றை மேற்­கொண்­டுள்­ளது. ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் பிர­தமர் நிய­மனம் முதல் ஜன­நா­யக விரோத செயற்­பா­டு­க­ளையே முன்­னெ­டுத்து வரு­கி­றது. பிர­தம நீதி­ய­ர­ச­ரையும் அர­சியல் அமைப்­புக்கு எதி­ரான முறையில் நீக்­கினர். அத்­துடன் முத­ல­மைச்­சர்­க­ளையும் ஜன­நா­ய­கத்­திற்கு எதி­ராக மாற்­றினர்.

தற்­போது தேரர்­க­ளுக்கு “ஜம்பர்” அணி­விக்­கின்­றனர். அதேபோல் அரச உயர் அதி­கா­ரிகள், அர­சி­யல்­வா­திகள், வர்த்­த­கர்கள் பொது­மக்கள் என பல­ருக்கும் “ஜம்பர்” அணி­விக்­கின்­றனர். எனவே நாட்டில் தற்­போது ஜம்பர் ஜன­நாயகம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அமைச்­சர்கள் நாட்டின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வுகள் பற்றி பேசு­வ­தில்லை. மாறாக அர­சியல் வைராக்­கி­யமே பேசு­கின்­றனர். குறித்த நபரை குறித்த தினத்தில் சிறையில் அடைப்­ப­தாக பெயர் கூறிக் குறிப்­பி­டு­கின்­றனர்.

ஏதா­வது பிழை செய்­­தி­ருந்தால் அது குறித்து நட­வ­டிக்கை எடுக்கும் விதி­முறை உள்­ளது. ஆனால் அதற்குப் புறம்­பா­கவே தற்­போது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கி­றது. யாருக்கு எதி­ராக வழக்­குத்­தாக்கல் செய்வது? யாரை சிறையில் அடைப்பது என்பது குறித்து அரசியல்வாதிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களின் குழுக்களுமே அதனைத் தீர்மானிக்கின்றன. எனவே நல்லாட்சி அரசாங்கம் ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் சீரழித்துக்கொண்டு வருகிறது.

 சிலர் பாராளுமனறில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீது  குற்றசாட்டுக்களை முன்வைக்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு தமது கடந்த காலம் மறந்து போயுள்ளது.பட்டலந்த வதை முகாம் மற்றும் வெள்ளை வேன் கடத்தலின் ஸ்தாபகர்கள் தற்போது ஜனநாயகம் பற்றிப் பேசுகின்றனர். 

நாட்டில் பாரிய பிரச்சினை இருக்கும் நிலையில் , எனது வீட்டில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் கலந்துகொண்ட அநுநாயக்க தேரர் குறிப்பிட்ட ஆலோசனையை திரிபுபடுத்தி   அதனை பலர் பேசினர். அவ்வாறான அராஜக நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. எனவே நல்லாட்சி அரசாங்கத்தை நாம் மாற்றுவதுடன் எதிர்வரும் அரசாங்கம் எவ்வாறு அமைய வேண்டும் எனவும் கவனம் செலுத்தவுள்ளோம் என்றார்.