“கடற்­ப­டையின் தெற்குத் தலை­மை­யகம் அம்­பாந்­தோட்­டைக்கு இட­மாற்­றப்­படும்”

Published By: Priyatharshan

02 Jul, 2018 | 11:11 AM
image

இலங்கை கடற்­ப­டையின்  தெற்கு  தலை­மை­ய­கத்தை   அம்­பாந்­தோட்­டைக்கு இட­மாற்­று­வ­தற்கு  நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அந்­த­வ­கையில் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தின் பாது­காப்பும் இலங்கை  கடற்­ப­டையின் கட்­டுப்­பாட்டின் கீழேயே இருக்கும். எனவே   அதன்  பாது­காப்பு தொடர்பில் யாரும் அச்­சம் ­கொள்ளத் தேவை­யில்லை என்று   பிர­தமர் அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் பிர­தமர் அலு­வ­லகம் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

கடந்த 29 ஆம்  திகதி கொழும்பில் நடை­பெற்ற மறைந்த பொரு­ளா­தார நிபுணர் சமன் கெலும் ­க­ம­கேவின் நினை­வு­தின நிகழ்வில்   பிர­தமர் ஆற்­றிய  உரை தொடர்பில்   ஊட­கங்­களில் வெளி­வந்­துள்ள செய்­தி கள் குறித்துவிளக்­க­ம­ளிக்க கட­மை­பட்­டுள்ளோம்.  சீன  ஜனா­தி­பதி மற்றும் அந்­நாட்டின் பிர­த­ம­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்தி இரண்டு நாடு­க­ளுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் பிர­தமர் ஒரு இணக்­கப்­பாட்­டிற்கு வந்­தி­ருந்­த­தாக பிர­தமர் இந்த நிகழ்வில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அம்­பாந்­தோட்டைத்  துறை­மு­கத்தை யுத்த நோக்­கத்­திற்­காக பயன்­ப­டுத்­தக்­கூ­டாது என இலங்கை சீனா­விற்கு அறி­வித்­தி­ருக்­கின்­றது.  

அதனால்   தெற்­கி­லுள்ள   கடற்­ப­டையின் தலை­மை­ய­கத்தை   அம்­பாந்­தோட்­டைக்கு இட­மாற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.  அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தின்  பாது­காப்பு நட­வ­டிக்­கைகள்  இலங்கை கடற்­ப­டையின் கட்­டுப்­பாட்­டி­லேயே இருக்கும். எனவே,  அது தொடர்பில் நாம் அச்­சப்­ப­ட­வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

இதன்­போது  சீன இரா­ணுவம்  அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் முகாம் ஒன்றை அமைத்தால் நீங்கள் என்ன செய்­வீர்கள் என்று  ஒரு­முறை  அமெ­ரிக்க  பிரஜை  ஒருவர்  பிர­த­ம­ரிடம்  கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

அதற்கு பதி­ல­ளித்த பிர­தமர்  முழு­மை­யான  இரா­ணுவ பிரிவு ஒன்று அம்­பாந்­தோட்­டையில்   நிறு­வப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.   வெளி இரா­ணுவ   தலை­யீட்­டுக்கு   தான்  ஒரு­போதும்   எதிர்ப்பு தெரி­விக்­க­மாட்டோம் என பிர­தமர்  எந்­த­வொரு  இடத்­திலும் குறிப்­பி­ட­வில்லை.   இலங்கை இரா­ணுவப் பிரிவு நிறு­வப்­பட்­டுள்ள வளை யத்தில் வேறு எந்­த­வொரு  கடற்­ப­டையும்  உள்­வர முடி­யாது என்றும் பிர­தமர் இதன்­போது வலி­யு­றுத்­திக்­ கூ­றி­யி­ருந்தார்.

அம்­பாந்­தோட்டை துறை­மு­க­மா­னது விரைவில்   அம்­பாந்­தோட்டை மற்றும் மொன­ரா­கலை ஆகிய  அபிவிருத்தி குறைந்த   மாவட்டங்களின் அத்தியாவசிய பொரு ளாதார அபிவிருத்தியை  முன்னெடுப்பதற் கான   ஒரு வர்த்தக துறைமுகமாக    மாற்றம டையும் என்பதை தெரிவிக்கின்றோம் என்று பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11