குளியாப்பிட்டிய பகுதியிலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இதன் போது பெண்ணொருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.