கிளிநொச்சி பரந்தன் பகுதியில் தனியார் வீடு ஒன்றில் புதையல் தேடும் கருவி ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது இதுதொடர்பில் ஐந்து சந்தேகநபர்களை கிளிநொச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாரினால் கைது செய்தவர்கள் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை சேர்ந்த இரண்டு பேரும் கிளிநொச்சி பளை பகுதியில் ஒருவரும் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இருவருமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர். மேலும்

இதுவரையில் கிளிநொச்சியில் மட்டும் 3 புதையல் தேடும் கருவிகளை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.