பெல்­ஜி­யத்தைச் சேர்ந்த 8  வயது சிறுவன் ஒருவன்  உயர் பாட­சாலைக் கற்­கையை பூர்த்தி செய்து  பல்­க­லைக்­க­ழகம் செல்லும் தகு­தியைப் பெற்று சாதனை படைத்­துள்ளான்.

லோரன்ட் சிமென்ஸ் என்ற மேற்­படி சிறு­வனின் மதி­நுட்ப ஆற்றல்   145  என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது 18  வய­து­டைய இளை­ஞர்­களின் மதி­நுட்ப ஆற்­ற­லுக்குச்  சம­மா­ன­தாகும். அவன்  ஒன்­றரை வயதில் கல்­வியை   ஆரம்­பித்து ஆறரை வருட காலத்தில் உயர்  பாட­சாலைக் கல்­வியை பூர்த்தி செய்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. 

லோரன்ட்டின் தந்தை பெல்­ஜிய நாட்­ட­வ­ராவார். அவ­னது தாயார்  நெதர்­லாந்து பிர­ஜை­யாவார். பெல்­ஜி­யத்தின் ஆர்.ரி.பி.எப். வானொ­லிக்கு லோரன்ட் அளித்த பேட்­டியின் போது,  தனக்கு மிகவும் பிடித்­த­மான பாடம்  கணிதம்  என்று தெரி­வித் தான்.

அவன்  இரு மாத கால விடு­மு­றையைத் தொடர்ந்து பல்­க­லைக்­க­ழகக் கல்­வியைத் தொட­ர­வுள்ளான். தான் சத்­தி­ர­சி­கிச்சை நிபு­ண­ரா­கவும் விண்­வெ­ளி­ வீரர் ஒரு­வ­ரா­கவும் வரு­வ­தற்கு விரும்­பு­வ­தாகத் தெரி­வித்த  லோரன்ட் ,  ஆனால் தற்­போது கணினித்துறையில் கற்­கையை மேற்­கொள்ளத் திட்­ட­மிட்­டுள்­ள­தாகக் கூறினான்.

இது தொடர்பில் லோரன்ட்டின்  தந்தை தெரிவிக்­கையில், தனது மகன் தன்­னுடன்  கல்வி கற்கும் மாண­வர்­களை விடவும் மிகவும் இள­மை­யாக உள்­ளதால்  அவர்­க­ளுடன் இணைந்து விளை­யாட்­டு­களில் ஈடு­ப­டு­வ­தற்கு  சிர­மத்தை  எதிர்­கொண்­டுள்­ள­தா­கவும் எனினும்   அவன் தனது வய­தை ­யொத்த ஏனைய சிறு­வர்கள் போன்று பொம்­மை­க­ளுடன் விளை­யா­டு­வ­தற்கு விரும்­ ப­வில்லை எனவும் கூறினார்.