ஹிட்லர் ஆட்சியை  நாம் நடத்தவில்லை - பிரதமர்  

Published By: Vishnu

02 Jul, 2018 | 07:44 AM
image

மக்களுக்கு சேவை செய்யும் பொழுது கடந்த ஆட்சியைப்போல் ஹிட்லர் ஆட்சியை நாம் மேற்கொள்ளவில்லை. இன்று எமது நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி பேசுகின்றனர். ஆனால்  அன்று அவர்கள் பெற்ற கடன் களையும் இன்று நாம் அடைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 

பன்விலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கலா பொக்க பெருந்தோட்ட மக்களுக்காக 500 காணிகளுக்கான உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் 

இப்பிரதேச பெருந்தோட்ட மக்களுக்கு இன்று மகிழ்ச்சிக்குரிய நாளாகும்.  எமது அரசாங்கத்தைப் பொறுத்தளவிலே சகல இன மக்களும் சமாதானத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ வழி சமைப்பதே நோக்கமாகும்.  

காணிகள் வழங்கும் திட்டத்தைவிட மலையகத்தில் கிராமங்கள் அமைக்கும் திட்டமாகவே இதை நாம் கருதுகின்றோம். அதேபோல் சிங்கள மக்களுக்கும் இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அமைச்சர் திகாம்பரம்  காணியையும் கொடுத்து வீடும் கட்டி கொடுக்கின்றார்.  மக்களுக்கான சேவைகளை செய்வதில் எமது நல்லாட்சி அரசாங்கம் என்றும் பின்னிற்கப்போவதில்லை. 

ஊடகங்களை எடுத்துக் கொண்டால் எம்மை குறை கூறி திருடர் என்கின்றார்கள்.  இன்றும் ஒரு பத்திரிகையில் என்னைத் திட்டி எழுதியிருந்தார்கள்.  மக்களுக்கு சேவை செய்யும் பொழுது கடந்த ஆட்சியைப்போல் ஹிட்லர் ஆட்சியை நாம் மேற்கொள்ளவில்லை.  அம்பாந்தோட்டை துறைமுகம் குரங்குகளின் கூடாரமாக இருந்தது.  அதற்காகவே அங்கு நெல்லை கொட்டினோம்.  குரங்குகள் சாப்பிடுவதற்காக செய்தோம். இது தான் ஹிட்லரின் சகோதரரின் ஆட்சி காலமாகும் .

இன்று துறைமுகத்தை பார்த்தால் சர்வதேச கப்பல்கள் வந்து இறங்க கூடிய துறைமுகமாக காட்சியளிக்கின்றது. அதே போல் விமான நிலையமும் உள்ளது. இன்று எமது நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி பேசுகின்றனர். ஆனால்  அன்று அவர்கள் பெற்ற கடன்களையும் நாம் அடைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.  

 இதுவே உண்மை நிலையாகும்.  கல்விக்கும் சுகாதாரத்திற்கும் முன்னுரிமை வழங்கியுள்ளோம் கருவாப்பட்டை உற்பத்தி ஏலம் போன்ற அந்நிய செலவாணியை ஈட்டக்கூடிய உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்து வருக்கின்றோம் . பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகினறோம். தமிழ்மொழி மூலம் கற்கும் மாணவர்களுக்கு விஞ்ஞான ரீதியான அறிவினை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றோம். 

இன்று ஒரு சில பொருட்களின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன. அதனை நிவர்த்தி செய்யும் நோக்கத்தோடு பலவேறு திட்டங்களை மேற்கொள்கின்றோம். இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் அனைத்தும் சரி செய்யப்பட்டு பொருளாதாரத்தில் தன்னிறைவை காண முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37