ஐரோப்பிய அணிகள் இரண்டு மோதும் 2 ஆவது நொக் அவுட் போட்டி

Published By: Priyatharshan

01 Jul, 2018 | 08:32 PM
image

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் கால்பந்தாட்டத்தின் முன்னோடி கால் இறுதிகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் மோதப்படும் மூன்று போட்டிகளில் இரண்டாவதான குரோஏஷியாவுக்கும் டென்மார்க்குக்கும் இடையிலான போட்டி நிஸ்னி நொவ்கோரொட் விளையாட்டரங்கில் இன்று இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.பத்து வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் போன்றே ரஷ்யாவிலும் திறமையை வெளிப்படுத்தி வரும் குரோஏஷியா, லீக் சுற்றில் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றியீட்டி இரண்டாம் சுற்றான முன்னோடி கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றது.முன்னாள் சம்பியன் ஆர்ஜன்டீனாவை 3 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் லீக் சுற்றில் வெற்றிகொண்டமை குரோஏஷியாவின் அதி சிறந்த பெறுபேறாகும்.பத்து வருடங்களுக்கு முன்னர் டென்மார்க்கும் திறமையை வெளிப்படுத்தி கால் இறுதிவரை முன்னேறியிருந்தது. முன்னோடி கால் இறுதியில் விளையாட தகுதிபெற்ற 16 நாடுகளில் டென்மார்க் மாத்திரமே குறைவான கோல்களைப் போட்ட அணியாகத் திகழ்கின்றது.. அவ்வணி 3 போட்டிகளில் 2 கோல்களை மாத்திரமே போட்டுள்ளது. ஒரு வெற்றி, 2 வெற்றிதோல்வியற்ற முடிவுகளுடன் முன்னேறியுள்ள டென்மார்க், இன்றைய போட்டியில் வெற்றிபெறுவதற்கு அனுகூலமான அணி என்று சொல்வதற்கில்லை.ஆனால், இந்த இரண்டு அணிகளும் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் சந்தித்துக்கொண்டபோது முதலாம் கட்டம் 1 க்கு 1 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. இரண்டாம் கட்டத்தில் 3 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையில் டென்மார்க்  வெற்றிபெற்றிருந்தது.
அணிகள் விபரம்குரோஏஷியா: டெனியல் சுபாசிக், சிமே விர்சாஜிகோ, டிஜான் லவ்ரென், டொமாகொக் விதா, ஐவன் ஸ்ட்ரினிக், ஐவன் ரகிட்டிக், மிலான் படெல்ஜ், அன்டே ரெபிக், லுக்கா மொட்ரிக் (அணித் தலைவர்), ஐவன் பெரிசிக், மரியோ மெண்ட்சுகிக்.டென்மார்க்: கெஸ்பர் ஷ்மெய்ச்செல், ஜென்ஸ் ஸ்ட்ரைஜர் லார்சன், அண்ட்ரெஸ் க்றிஸ்டென்சன், சைமன் கேஜேயர் (அணித் தலைவர்), ஹென்றிக் டில்ஸ்கார்ட், லெசே ஸ்கோன், தொமஸ் டிலேனி, பியோன் சிஸ்டோ, க்றிஸ்டியன் எரிக்சன், யூசுவ் யுரரி பௌல்சென், நிக்கலாய் ஜோர்ஜென்சென்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49