முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு நட்டான்கண்டல் வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்குப் பிரதேச சபைக்குட்பட்ட நட்டான்கண்டல்  வைத்தியசாலை கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நிரந்தர வைத்தியர் இன்றி காணப்படுகின்றது. இதனால் இங்கு சிகிச்சைக்காகச் செல்லும் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இங்கு நிரந்தர வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மல்லாவி வைத்தியசாலைக்கே சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏனைய  வார நாட்கள் வைத்தியர்கள் அற்ற நாட்களாக  காணப்படுகின்றன.எனவே இங்கு ஒரு நிரந்தர  வைத்தியரை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல்வேறு தரப்புக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.