உத்தரகாண்ட மாநிலம பாப்ரி கர்வால் மாவட்டத்தில் பேருந்து ஒன்று 60 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து வீழ்ந்ததில் 48 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். 

பாப்ரி கர்வால் மாவட்டத்திலுள்ள நனிதண்டா மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தேபோதே பேருந்து பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. இவ் விபத்தின் போது காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் இவர்களில் சிலரது நிலைமைகள் கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரியவருகிறது.