கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் இன்று 500 ஆவது  நாளை எட்டியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் எவ்வித தீர்வுமின்றி இன்று 500 ஆவது நாளை எட்டியுள்ளது.

அந்த வகையில் இன்றைய தினம் வடக்கு கிழக்கைச் சேர்ந்த எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி   ஆலய முன்றலில்  கவனயீர்ப்பு  போராட்டம்  ஒன்றை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.