புகையிரத நிலையங்களிலும் புகையிரதங்களிலும் யாசகம் பெறுபவர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் விஜயசமரசிங்க தெரிவித்துள்ளார்.

 

யாசர்கள் காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை கருத்திற்கொண்டே மேற்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தேவை ஏற்படின் பொலிஸாரின் உதவியையும் நடாவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையானது இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.