அமெ­ரிக்­காவின் கென்டக்கி மாநி­லத்தில் சாராயத் தொழிற்­சா­லைக்­க­ரு­கி­லுள்ள ஆறு­களில் நூற்­றுக்­க­ணக்­கான மீன்கள் இறந்­துள்ள சம்­பவம் அங்கு வசிக்கும் பல­ருக்கு ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

'Bourbone' எனும் பிர­சித்தி பெற்ற விஸ்கி நிறு­வ­னத்தின் களஞ்­சி­ய­சா­லைகள்  குறித்த மாநி­லத்தில் அமைந்­துள்­ளன.  அதில் ஒரு களஞ்­சிய சாலை கடந்த நாட்­களில் இடிந்து விழுந்­தது. இதனால் கிட்­டத்­தட்ட 9,000 மது­பான பெரல்கள் உடைந்து அதி­லி­ருந்து வெளி­யான மது­பானம் அரு­கி­லுள்ள ஆறு­களில் கலந்­தன. இதனால் அந்த ஆற்றில் இருந்த  மீன்கள் இறந்­தன.

குறித்த விபத்து ஏற்­பட்­ட­வுடன் அந்த நிர்­வாகம் சுற்­றாடல் திணைக்­கள அதி­கா­ரி­க­ளுக்கு தெரி­வித்­தி­ருந்­தது.  ஆனாலும்,  மது­சாரம் ஆற்று நீரில் கலந்­தி­ருந்­தமை குறித்து தெரி­வித்­தி­ருக்­க­வில்லை. பின்னர் குறித்த நிறு­வனம் மேற்­கொண்ட சோத­னை­களின் பிர­கா­ரமே இவ்­வாறு மது­சாரம் ஆற்று நீரில் கலந்­தி­ருந்­த­மையும் அதனால் ஏரா­ள­மான மீன்கள் இறந்­துள்­ள­மையும் தெரி­ய­வந்­துள்­ளது.