சுமார் 500 கிராம் நிறையுடைய 60 கொக்கெய்ன் மாத்திரைகளுடன் கட்டார் நாட்டிலிருந்து இலங்கையை வந்தடைந்த ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் பிரேஸில் நாட்டுப் பிரஜை எனவும் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் மாத்திரைகள் 13 மில்லியன் ரூபா பெறுமதியானவை எனவும் சுங்கப்பிரிவு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.