நியுயோர்க் டைம்ஸிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக சீனா நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்றார் என நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவல் இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே மகிந்த ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

எனக்கு பாரிய அவதூறை ஏற்படுத்தும் விதத்திலான அந்த தகவல்களில் சிறிதளவும் உண்மையில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனது சட்டத்தரணிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

நியுயோர்க் டைம்ஸின் குறிப்பிட்ட கட்டுரை அரசியல்நோக்கங்களை கொண்டது இலங்கையில் உள்ள சில தரப்பினர் அதனை புகுத்தியுள்ளனர் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.