அம்பாந்தோட்டை துறைமுகத்தால் இலங்கையின் பாதுகாப்பிற்கு ஆபத்தா?- பிரதமர் தெரிவித்தது என்ன?

Published By: Rajeeban

30 Jun, 2018 | 09:01 PM
image

இலங்கையின் தென்பகுதி கடல் ஊடாக ஊருடுவல் இடம்பெறும் என இலங்கை அரசாங்கம் கவலையடையவில்லை  என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சில நாட்களிற்கு முன்னர் கொழும்பில் பிரதமர்ஆற்றிய உரை குறித்து தெளிவுபடுத்தும் விதத்தில் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் தங்கள் தென்பகுதிக்கான கட்டளைபீடத்தை அம்பாந்தோட்டைக்கு மாற்றுகின்றனர் என தெரிவித்துள்ள பிரதமர் அம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என்பதால் அச்சமடையதேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தான் சீனா தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இருநாடுகளுக்கும் பயனளிக்கும் விதத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை திட்டத்தை மாற்றினேன் என்றே  சில நாட்களிற்கு முன்னர் தெரிவித்தார் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டையை இராணுவநோக்கங்களிற்காக பயன்படுத்த முடியாது என  இலங்கை சீனாவிற்கு அறிவித்துள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம் இலங்கை கடற்படையின் தென்பகுதி கட்டளைபீடத்தை இலங்கை அம்பாந்தோட்டைக்கு மாற்றுகின்றது துறைமுகத்தின் பாதுகாப்பு கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழேயே இருக்கும் என்பதால் அச்சப்பட தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

அம்பாந்தோட்டையில் சீனா படையினர் தரையிறங்கினால் என்ன செய்வீர்கள் என அமெரிக்க பிரதமரிடம் ஒரு முறை கேள்வி எழுப்பியது இதற்கு அங்கு முழுமையான இராணுவப்பிரிவொன்று நிலை கொண்டுள்ளது என பிரதமர் பதில் அளித்தார் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிப்பொன்றை எதிர்க்கமாட்டேன் என பிரதமர் ஒருபோதும் தெரிவிக்கவில்லை இலங்கையில் தனது கடற்படையினரை தரையிறக்குவதற்கான ஆற்றல் பிராந்தியத்தின் எந்த நாட்டிடமும் இல்லை எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24