நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்த உண்மை நிலவரத்தை அரசாங்கம் மறைக்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஒட்டிசுட்டானில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் 15 கிலோகிளைமோரும் மீட்கப்பட்டது என்பதை அரசாங்கம் மறைத்துவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவரே ஒட்டிசுட்டான் சம்பவத்தை அம்பலப்படுத்தினார் இவ்வாறான சம்பவங்களை அம்பலப்படுத்துவதால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளைமோர்களை தூரத்திலிருந்தும் வெடிக்கவைக்கலாம் என தெரிவித்துள்ள சரத்வீரசேகர முல்லைத்தீவில் அவை மீட்கப்பட்டமை மிகவும் ஆபத்தான நிலை நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது,இதன் காரணமாக அரசாங்கம் உண்மை நிலவரத்தை தெரிவிக்கவேண்டும் இது மக்கள் எச்சரிக்ககையுடன் இருப்பதற்கு உதவியாக அமையும் எனவும் சரத்வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

ஆபத்தான ஆயுதங்கள் மீட்கப்பட்டதை அரசாங்கம் மறைத்தமை இது முதல் தடவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.