ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நாயகியாக நடிக்க நடிகை நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட வெற்றியடைந்த படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது.

 இதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான பிக் பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் கமல் அறிவித்தார்.

தனது அரசியல் பயணத்திற்கு இப்படம் மிகச் சிறந்த அடித்தளமாக அமையும் என கமல் நம்புகிறார். 

ரஜினியின் '2.0' பட வேலைகளில் பிசியாக இருக்கும் இயக்குனர் ஷங்கர், இந்தியன் 2 படத்திற்கான வேலைகளிலும் ஒருபக்கம் ஈடுபட்டுள்ளார். இந்த படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்களை அவர் தெரிவு செய்து வருகிறார். 

இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளராக அனிருத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் இப்படத்திற்கு ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பட தயாரிப்பு நிறுவனமான லைகா தரப்பில் இருந்து இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், பட வட்டாரங்கள் இந்த செய்தியை உறுதிபடுத்துகின்றன.