அதர்வா நடிப்பில் வெளியாகியிருக்கும் செம போத ஆகாத ரசிகர்களின் வரவேற்பினால் வெற்றிப் பெற்றிருக்கிறது. இந் நிலையில் அதர்வா நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு குருதி ஆட்டம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

‘8 தோட்டாக்கள் ’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் சிறி கணேஷ். இவரின் இயக்கத்தில் அடுத்த உருவாகவிருக்கும் படத்திற்கு குருதி ஆட்டம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. 

நடிகர் அதர்வா தற்போது இமைக்கா நொடிகள், ஒத்தைக்கு ஒத்த, பூமராங், 100 ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.