பளுதூக்கலில் வட மாகாணப் பாடசாலைகளுக்கு 4 தங்கங்கள், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்

Published By: Daya

30 Jun, 2018 | 02:10 PM
image

(நெவில் அன்தனி)

கந்தளாய், அக்ரபோதி வித்தியாலயத்தில் நடைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா பளுதூக்கல் போட்டிகளில் வட மாகாணப் பாடசாலைகளுக்கு 4 தங்கப் பதக்கங்களும் ஒரு வெள்ளிப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமும் கிடைத்தன. 

முதலாம் நாளான வெள்ளியன்று 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பளுதூக்கல் போட்டிகள் நடைபெற்றன.

இதில் பாஷையூர் புனித அந்தோனியார் மகளிர் வித்தியாலயத்துக்கு 3 தங்கப் பதக்கங்களும் ஒரு வெண்கலப் பதக்கமும் கிடைத்தன.

 

48 கிலோ கிராம் எடைப்பிரிவில் ஏ. திசாலினி ஸ்னெச் முறையில் 42 கிலோ கிராம் எடையையும் க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 50 கிலோ கிராம் எடையையும் தூக்கி மொத்தம் 92 கிலோ கிராம் எடையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

53 கிலோ கிராம் எடைப் பிரிவில் ஏ. ஆன் பியூலா (ஸ். 40 கி.கி., ஜே. 50 கி.கி., மொ. 90 கி.கி.) தங்கப் பதக்கத்தையும், ஜே. ஸ்டெல்லா (ஸ். 35 கி.கி., ஜே. 45 கி.கி., மொ. 80 கி.கி.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

75 கிலோ கிராம் மற்றும் மேற்பட்டதுமான எடைப் பிரிவில் ஜே. சுகன்யா (ஸ். 55 கி.கி., ஜே. 65 கி.கி., மொ. 120 கி.கி.) தங்கப் பதக்கத்தை வென்றார்.

யாழ். இந்து கல்லூரிக்கு ஒரு தங்கப் பதக்கமும் ஒரு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தன.

63 கிலோ கிராம் எடைப் பிரிவில் ஜே. பஜினா (ஸ். 46 கி.கி., ஜே. 60 கி.கி., மொ. 106 கி.கி.) தங்கப் பதக்கத்தையும் 75 கிலோ கிராம் எடைப் பிரிவில் பி. தரங்கினி (ஸ். 35 கி.கி., ஜே. 45 கி.கி., மொ. 80 கி.கி.) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் பி. நிலோஜினி (ஸ். 42 கி.கி., 50 கி.கி., மொ. 110 கி.கி.) தங்கப் பதக்கத்தை வென்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49