மது விற்பனை நிலையத்தினால் கிராம மக்கள் தொடர்ந்தும் பாதிப்பு : பொறுப்புள்ள அதிகாரிகள் மௌனம்!!!

Published By: Digital Desk 7

30 Jun, 2018 | 11:43 AM
image

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரியகடை கிராமத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மது விற்பனை நிலையத்தினால் குறித்த கிராம மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு, குறித்த பிரதேச பெண்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாக குறித்த கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்போது குறித்த மது விற்பனை நிலையத்தினை அப்பகுதியிலேயே நிரந்தரமாக வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு குறித்த பகுதியில் மது விற்பனை நிலையம் திறக்கப்பட்ட போது குறித்த கிராம மக்கள், பொது அமைப்புக்கள் இணைந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்த போதும் இது வரை குறித்த மது விற்பனை நிலையத்தை அவ்விடத்தில் இருந்து அகற்ற அதிகாரிகள் எவரும் முன் வரவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனால் குறித்த கிராமத்தில் உள்ள பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதோடு மன ரீதியாகவும் பாதிப்படைந்துள்ளனர்.

தொடர்ச்சியாக மது விற்பனை நிலையத்திற்கு முன் சண்டை இடம் பெறுவதோடு தீய வார்த்தை பிரையோகம் தொடர்ச்சியாக இடம் பெறுவதினால் பாடசாலை மாணவர்களும், பெண்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே குறித்த கிராமத்தில் இருந்து முழுமையாக மது விற்பனை நிலையத்தை அகற்ற மக்கள் நடவடிக்கைகள மேற்கொண்டு வருகின்ற நிலையில் சில அரச அதிகாரிகளின் பக்க பலத்துடன் குறித்த கிராமத்தில் மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிரந்தரமாக மது விற்பனை நிலையத்தை அக்கிராமத்தில் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உடனடியாக குறித்த மது விற்பனை நிலையத்தை இடமாற்றம் செய்ய மன்னார் பிரதேசச் செயலாளர், மன்னார் நகர முதல்வர், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறித்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37