வவுனியா –  லக்ஷபான வீதி, தோணிக்கல் பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் கடை ஒன்றிற்கு கைக்குழந்தையுடன் சென்ற குடும்பப் பெண்ணின் 2 பவுணுக்கும் அதிகமான தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அறுத்துச் சென்றுள்ளனர்.

அப் பகுதியில் இருந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர்களை பிடிக்க முயற்சித்தும் முயற்சி பயனலிக்கவில்லை 

சம்பவத்தை தொடர்ந்து குறித்த பெண்ணால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்ப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து திருடர்களை பிடிக்க பொலிஸார் தீவிர விசாரணைகளை நடாத்தி வருவதோடு தேடல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.