இன்று இலத்­தி­ர­னியல் அச்சு ஊட­கங்­களில் சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் பிர­தான சர்­வ­தேச பேசு­பொ­ருளாக அமெ­ரிக்க - வட­கொ­ரிய தலை­வர்கள் சந்­திப்பு, பலஸ்­தீன விவ­காரம், ISIS பயங்­க­ர­வாதம், சிரிய நெருக்­கடி, அக­திகள் விவ­காரம், புவி வெப்­ப­ம­டை­தலும் கால­நிலை மாற்­றங்­களும் போன்ற பல விட­யங்கள் காணப்­ப­டு­கின்­றன.

இதே சூழ்­நி­லையில் அமெ­ரிக்க - சீன வர்த்­தகப் போர், அமெ­ரிக்க - ஐரோப்­பிய நாடுகள் வர்த்­த­கப்போர் என்ற வாச­கங்­களும் உலகச் செய்­தி­களில் பர­வ­லாக பேசப்­ப­டு­கின்­றன. பூலோகம் இரண்டு மகா யுத்­தங்­க­ளையும், சோவியத் சீன, வியட்­நா­மிய கொரிய கம்­யூனிச புரட்­சி­க­ளையும், அமெ­ரிக்க சோவியத் வல்­ல­ர­சுகள் உலகை ஆதிக்கம் செய்த காலங்­களில் இரு தரப்பும் வெவ்­வேறு அர­சு­க­ளுக்கு ஆத­ரவு வழங்கி யுத்­தங்­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­ய­மையும் ஈராக், ஆப்­கா­னிஸ்தான் உள்­நாட்டு போர்­க­ளையும் கண்­டுள்­ளது.

இப்­பின்­ன­ணியில் நாடு­களுக்கிடை­யி­லான போர், உள்­நாட்டுப் போர்கள், பனிப்போர் என்ற பதங்­க­ளுடன் தற்­போது வர்த்­த­கப்போர் என்ற பதமும் அடிக்­கடி ஊட­கங்­களில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதால் வர்த்­த­கப்­போரும் ஆயுதம், அணு­ஆ­யுதம் பயன்­ப­டுத்­தப்­படும் போர் என்ற நிலையா என்­பது பற்றி சாதா­ரண வாச­கர்­களுக்கு, குழப்­பங்கள் நிறைய உண்டு என்­பது மறுக்க முடி­யாத நிதர்­ச­ன­மாகும். 

உலக நாடுகள் தனித்து இயங்­க­மு­டி­யாது. இன்னோர் நாட்­டுடன் வேறு­நா­டு­க­ளுடன் தொடர்­பு­களை ஏற்­ப­டு­த்தி தமது தேவை­க­ளையும் மற்­ற­வரின் தேவை­க­ளையும் ஈடு­செய்­வது என்­பது நடை­மு­றையில் நாம் அவ­தா­னிக்கும் விட­ய­மாகும். நாடு­களுக்­கி­டை­யி­லான உற­வு­களை இரு­த­ரப்பு உற­வுகள் எனக் கூறப்­ப­டு­கி­றது.

ஒரு நாடு பல நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்­புடன் உற­வுகள் மேற்­கொள்­வது பல்­த­ரப்பு உற­வுகள் என அழைக்­கப்­ப­டு­கின்­றது. இந்த உற­வுகள் அர­சியல், பொரு­ளா­தார, சமூக, விஞ்­ஞான, தொழில்­நுட்ப உற­வுகள் எனக் கூறப்­ப­டு­கி­றது. அர­சியல், பொரு­ளா­தார உற­வுகள் ஒரு தனி நாடா­க­வி­ருந்­தாலும் சரி பல­நா­டு­க­ளாக இருந்­தாலும் சரி புறக்­க­ணிக்­கத்­தக்­க­வை­யல்ல. அர­சியல் உற­வுகள் நாடு­களை  இணைக்கும் பிர­தான உற­வு­க­ளாகும்.

ஒரு நாடு இன்­னொரு நாட்டின் இருப்­பினை, சுதந்­தி­ரத்தை, இறை­மையை அங்­கீ­க­ரித்து இரு நாடு­களுக்­கு­மி­டையில் தூத­ர­க­மட்­டத்தில் உற­வுகள் பேணு­வது அர­சியல் உற­வாகும். பொரு­ளில்­லார்க்கு இவ்­வு­ல­கில்லை என்ற தமிழ் கருத்­தாழம் மிக்க வாக்­கி­யத்தின் பொருள் காட்டும் வழியில் நாடுகள் தம்­மக்­களை வாழ­வைக்கும் நோக்­குடன் பொறுப்­பாக, வினைத்­தி­ற­னாக செயற்­ப­ட­வேண்­டி­யது அர­சு­களின் கட­மை­யாகும்.

நாடு­களுக்­கிடையில் பண்­டங்கள் சேவைகள் ஏற்­று­மதி, இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்­றன. ஒரு நாட்­டி­லி­ருந்து இன்னோர் நாட்­டுக்கு மக்கள் சுற்­றுலா பய­ணி­க­ளாக செல்­வதும் வழ­மை­யாக நடை­பெறும் காரி­ய­மாகும். நாடு­களின் பொரு­ளா­தார செயற்­பாட்டில் பண்­டங்­களின் ஏற்­று­மதி, இறக்­கு­மதி முத­லிடம் வகிக்­கி­றது. இதனை நாடு­களுக்­கி­டை­யி­லான சர்­வ­தேச வர்த்­தகம் என அழைக்­கப்­ப­டு­கின்­றது. சர்­வ­தேச வர்த்­த­கத்தில் கூடிய பெறு­ம­தி­யான ஏற்­று­ம­தி­களைச் செய்யும் நாடுகள் செல்­வந்த நாடு­க­ளாக விளங்­கு­கின்­றன.

இன்று G  - 8 என அழைக்­கப்­படும் நாடு­களின் தொகுதி அவ்­வா­றான ஏற்­று­ம­தியில் பெருந்­தொ­கை­யான அந்­நிய செல­வா­ணியை சம்­பா­திக்­கின்­றன. அதே வழியில் கூடு­த­லான இறக்­கு­ம­தி­களில் தங்­கி­வாழும் நாடுகள் பெருந்­தொ­கை­யான அந்­நிய செல­வா­ணி­களை செலவு செய்ய வேண்­டி­யுள்­ளது. இந்த நாடு­களின் தொகுதி அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும் நாடுகள் என அழைக்­கப்­ப­டு­கின்­றன. 

அண்­மைய காலங்­களில் இன்­னொரு தொகுதி நாடு­களும் உரு­வாகி அபி­வி­ருத்­தி­ய­டைந்த நாடு­க­ளுக்கு சவால்­விடும் வகையில் கைத்­தொழில், உற்­பத்தி, தொழில்­நுட்பம், தகவல் தொழில்­நுட்பம், Digital  தொழில்­நுட்பத் துறை­களில் முன்­னே­றி­யுள்­ளன. அவற்றை புதிய பொரு­ளா­தாரப் புலிகள் என்றும் புதிய பொரு­ளா­தார பாய்ச்சல் நாடுகள் எனவும் அழைக்­கப்­ப­டு­கின்­றன. சீனா, ரஷ்யா.  இந்­தியா, பிரேசில், தென்­னா­பி­ரிக்கா ஆகிய நாடுகள் இத்­தொ­கு­தியுள் அடங்­கு­கின்­றன. இவற்றை அர­சியல் ரீதி­யாக பிறிக்ஸ் நாடுகள் என அழைக்­கப்­ப­டு­கின்­றன. பொரு­ளா­தா­ரத்தில் சென்­மதி நிலுவை என்ற பதம் மிகவும் கருத்­தா­ழ­மா­னது. ஒரு நாட்டின் உள்­நாட்டு நாணயம் வேறு, சர்­வ­தேச நாணயம் வேறு என்­பது சர்­வ­தேச வர்த்­த­கத்தில் நோக்க வேண்­டிய விட­ய­மாகும். சர்­வ­தேச நாண­யங்­க­ளான அமெ­ரிக்க டொலர், யூரோ, சீன யுவான் ஆகி­யவை சர்­வ­தேச நாணய சந்­தையில் பிர­தா­ன­மான நாண­யங்­க­ளாகும்.

ஒரு நாடு தனது சர்­வ­தேச வர்த்­த­கத்தின் மூல­மாக மித­மிஞ்­சிய வெளிநாட்டு நாண­யத்தை அதா­வது அமெ­ரிக்க டொலரை வைத்­தி­ருந்தால் அந்­நாடு செழிப்­பாக உள்­ள­தா­கவும் பற்­றாக்­கு­றை­யான டொலர் இருந்தால் மந்­த­மான நாடா­கவும் கரு­தப்­ப­டு­கி­றது. ஒரு நாட்டின் சென்­மதி நிலுவை என்­பது இந்­நாட்டின் டொலர் கணக்கின் அறிக்­கை­யாகும். உள்­நாட்டு நாணய விட­யங்கள் இடம்­பெ­ற­மாட்­டாது. சென்­மதி நிலுவை என்­பது ஏற்­று­மதி, இறக்­கு­மதி வர்த்­த­கத்தில் கிடைக்கும் டொலர், விமான,கடல்,காப்­பு­றுதி  சேவைகள் வழங்­கு­வதால் கிடைக்கும் டொலர், சுற்­று­லாத்­து­றையால் கிடைக்கும் டொலர், வெளிநாட்டில் தொழில் பார்ப்­ப­வர்கள் அனுப்பும் டொலர், வெளிநாட்டு நேரடி முத­லீடு, கடன் உதவி, திட்­ட­ உ­தவி ஆகி­ய­வற்றால் கிடைக்கும் டொலர், ஆகி­யவை  இடம்­பெறும் கணக்கு அறிக்­கை­யாகும். சென்­மதி நிலுவை கணக்கில் வர்த்­தக மீதி என்ற விடயம் முக்­கி­ய­மா­னது.

ஏற்­று­ம­திக்கும் இறக்­கு­ம­திக்கும் இடை­யி­லான வித்­தி­யாசம் வர்த்­தக மீதி­யாகும். அபி­வி­ருத்­தி­ய­டைந்த நாடு­களில் வர்த்­தக மீதி சாத­க­மா­கவும் அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும் நாடு­களின் வர்த்­தக மீதி பாத­க­மா­கவும் காணப்­ப­டு­கின்­றன. வர்த்­தக ரீதியில் டொலர் மித­மிஞ்சிக் காணப்­படும் நிலை சாதகம் என்­பதும் வர்த்­தக ரீதியில் டொலர் பற்­றாக்­கு­றை காணப்­ப­டும் நிலை பாதகம் என்­பதும் குறிப்­பி­டப்­ப­ட­வேண்டும். இதன் கார­ண­மா­கவே அபி­வி­ருத்­தி­ய­டையும் நாடுகள் முன்­னே­று­வ­தற்கு ஏற்­று­மதி சம்­பாத்­தி­யத்தை அதி­க­ரிக்க வேண்­டு­மென்று உல­க­வங்கி, பொரு­ளா­தார அறி­ஞர்கள் சிபார்­சுகள் செய்­கின்­றனர்

இப்­பின்­ன­ணியில் அமெ­ரிக்க -– சீன வர்த்­கப்போர் ஆரா­யப்­பட வேண்டும். ஏதா­வது இரு நாடு­களுக்­கு­மி­டையில் அர­சியல் உற­வுகள் சிறப்­பாக காணப்­ப­டினும் பொரு­ளா­தார உற­வுகள் சிறப்­பில்­லா­மலும் இருக்க முடியும். அமெ­ரிக்கா உலகில் ஏக­வல்­ல­ரசு நிலையில் அர­சியல் பொரு­ளா­தார இரா­ணுவ விஞ்­ஞான துறையில் முன்­னே­றிய நாடாகும். இன்­று­உ­ல­க­ம­ய­மாக்கல் யுகத்தில் உலகில் புதிய அர­சியல், பொரு­ளா­தார போக்­குகள் உரு­வா­கி­யுள்­ள­மையால் முன்னர் நில­விய பொரு­ளா­தார ஆதிக்கம், பலம் ஆகி­ய­வற்றில் மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன.

இந்த வகையில் அமெ­ரிக்க -– சீன பொரு­ளா­தார உற­வுகள் உற்று நோக்­கப்­பட வேண்டும். அமெ­ரிக்க - சீன பொரு­ளா­தார உற­வுகள் அர­சியல் உற­வு­களை விட மிகவும் மேம்­பா­டா­னவை. அமெ­ரிக்க - சீன பொரு­ளா­தார உற­வுகள் மிகவும் சிறப்­பா­ன­வை­யெ­னவும் முன்­னோ­டி­யா­னது எனவும் பல உலகத் தலை­வர்­களும் பொரு­ளியல் அறி­ஞர்­களும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். அமெ­ரிக்கா மிகவும் அதி­க­மான கடன்­களை சீனா­வி­ட­மி­ருந்து பெற்­றுள்­ளது என்­பது பல­ருக்கு தெரி­யாத விட­ய­மாகும்.

வேறு வார்த்­தையில் கூறினால் அமெ­ரிக்கா சீனா­வி­ட­மி­ருந்து பெரும் கடன் சுமை­களை பெற்­றுள்­ளது. எமது நாட்டின் முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் பெற்ற கடன் சுமை நாட்­டுக்கு பாத­க­மா­க­வுள்­ளது என தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் கூறி­வரும் நிலையில் அமெ­ரிக்கா சீனா­வுக்கு ஏரா­ள­மான கடன்­களை திருப்பி செலுத்த வேண்டும் என்­பது சுவா­ரஷ்­ய­மான விட­ய­மாகும். அமெ­ரிக்கா உலகில் முத­லா­வது பெரிய பொரு­ளா­தார நாடாகும். சீனா இரண்டாம் நிலை­யி­லுள்ள நாடாகும். உலகப் பொரு­ளா­தார விருத்­தியில் முதல் பத்து நாடு­க­ளாக அமெ­ரிக்கா, சீனா, ஜப்பான், ஜேர்­மன், பிரித்தானிய, இந்­தியா, பிரான்ஸ், பிரேசில், இத்­தாலி, கனடா ஆகி­யவை உலக வங்­கியால் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளன. அமெ­ரிக்­காவில் சீனாவின் முத­லீ­டு­களும், சீனாவில் அமெ­ரிக்­காவின் முத­லீ­டு­களும் செறி­வாக அமைந்­துள்­ளன. அமெ­ரிக்க முத­லீ­டு­களில் சீனாவில் பெரும் நட்­சத்­திர ஹோட்­டல்கள், சுற்­றுலா விடு­திகள் மற்றும் தொழிற்­சா­லைகள் போன்ற பல துறை­களில் அமெ­ரிக்க முத­லீ­டுகள் காணப்­ப­டு­கின்­றன. அமெ­ரிக்க – சீன இரு­த­ரப்பு வர்த்­தகம் கோடா­ன­கோடி அமெ­ரிக்க டொலர்கள் பெறு­ம­தி­யா­ன­தாகும். உலகில் முதலாம் இரண்டாம் நிலை­யி­லுள்ள இரண்டு பெரிய பொரு­ளா­தா­ரங்கள் ஏன் வர்த்­தகப் போரில் ஈடு­ப­டு­கின்­றன. அதன் தாக்­கங்கள் யாவை? உலக பொரு­ளா­தா­ரத்தின் மீது எத்­த­கைய தாக்­கங்கள் தோன்றும்? என்­ப­தான விட­யங்­களை ஆராய வேண்டும். அமெ­ரிக்­காவும் சீனாவும் மிகப்­பெ­ரிய ஏற்­று­ம­தி­யா­ளர்­களும் இறக்­கு­ம­தி­யா­ளர்­களும் என்­பதை முதலில் குறிப்­பி­ட­வேண்டும். 

அமெ­ரிக்க – சீன இரு­த­ரப்பு வர்த்­தகம் உலகில் மிகவும் அதி­கூ­டிய இரு­த­ரப்பு வர்த்­த­க­மாகும். 2017ல் இரு­த­ரப்பு வர்த்­த­கத்தின் பெறு­மதி 750 பில்­லியன் டொல­ரி­னையும் தாண்­டி­யுள்­ளது. 2017 ஆம் ஆண்டில் அமெ­ரிக்கா சீனா­வி­ட­மி­ருந்து இறக்­கு­மதி செய்த பண்­டங்­களின் பெறு­மதி அமெ­ரிக்கா சீனா­வுக்கு ஏற்­று­மதி செய்த பெறு­ம­தியை விட 375 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் அதி­க­மாகும். வேறு வகையில் கூறினால் அமெ­ரிக்க சீன வர்த்­த­கத்தில், வர்த்­தக மீதி அமெ­ரிக்­கா­வுக்கு பாத­க­மா­ன­தாகும். அதா­வது சீனா­வுக்கு 375 பில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான சாத­க­மான வர்த்­தக மீதி ஏற்­பட்­டுள்­ளது.  இரு­த­ரப்பு வர்த்­த­கத்தில் வர்த்­தக மீதியில் தமக்கு சாத­க­மான மீதி கிடைக்க வேண்டும் என்­பதே இரு­த­ரப்பு வர்த்­த­கத்தின் நோக்­க­மாகும்.

ஒரு நாடு இன்­னொரு நாட்­டுக்கு ஏற்­று­மதி செய்­கின்­றது எனக் கூறும் போது அங்கு முக்­கி­ய­மான சில கூறப்­ப­டாத அர்த்­தங்கள் உண்டு. முத­லா­வ­தாக X என்னும் பண்­டத்தை ஏற்­று­மதி செய்­வ­தனால் அந்த நாட்டில் X பண்­டத்தை உற்­பத்தி செய்யும் தொழில்­துறை சிறப்­பாக இயங்­க­வேண்டும். அங்கு ஏரா­ள­மான தொழி­லா­ளர்கள் பணிக்கு அமர்த்­தப்­பட வேண்டும், மூல­தனப் பாய்ச்சல், முத­லீடு வேண்டும், மூலப்­பொ­ருட்­க­ளுக்­கான சந்தை வேண்டும். இவை­யாவும் ஒரு நாட்டின் பொரு­ளா­தா­ரத்­துக்கும் முக்­கி­ய­மான கார­ணி­க­ளாகும். உதா­ர­ண­மாக அமெ­ரிக்­காவில் உற்­பத்தி செய்­யப்­படும் விவ­சாயப் பண்­டங்கள் சீனா­வி­லி­ருந்து குறைந்த விலையில் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­மானால், அமெ­ரிக்க விவ­சாய பண்­டங்­க­ளுக்கு கேள்வி குறைந்து விடும். இதனால் விவ­சாய தொழிற்­துறை படுக்க ஆரம்­பிக்கும். விவ­சா­யத்­து­றையில் அமெ­ரிக்­கர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு குறைந்து விடும். இதுவே தான் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்பின் பிரச்­சி­னை­யாகும். ஜனா­தி­பதி தேர்­தலில் குடி­ய­ரசுக் கட்சி அபேட்­ச­க­ராக ட்ரம் போட்­டி­போ­டும்­போது உள்ளூர் தொழிற்றுறையை பாது­காப்­ப­தா­கவும் வேலை வாய்ப்­பினை அதி­க­ரிப்­ப­தா­கவும் கூறி­யி­ருந்தார். அண்­மைய வரு­டங்­களில் அமெ­ரிக்கா வர்த்­தக மீதி பாத­க­மா­யி­ருக்கும் நிலை கார­ண­மா­கவே அமெ­ரிக்க அதிபர் தேர்தல் பிர­சா­ரங்­களில் இந்த வாக்­கு­று­தி­களை வழங்­கினார். 

அமெ­ரிக்க சீன வர்த்­தக முரண்­பா­டு­களின் மத்­தியில் இரு­த­ரப்பு பேச்­சு­வா­ர்த்­தைகள் நடை­பெற்­றன. அமெ­ரிக்­காவின் பாத­க­மான வர்த்­தக மீதியை சரிக்­கட்­டு­வ­தா­க­வி­ருந்தால் சீனா அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து கூடு­த­லான பண்­டங்­களை இறக்­கு­மதி செய்­ய­வேண்டும். அமெ­ரிக்க அதிபர் பாத­க­மான வர்த்­தக மீதியை 375 பில்­லியன் டொலரில் இருந்து 100 பில்­லியன் டொல­ருக்கு குறைப்­ப­தற்­கான திட்­டங்­களைத் தீட்­டி­யி­ருந்தார். 2018ம் ஆண்டு பங்­குனி மாதத்தில் சீனா­விலி­ருந்து இறக்­கு­ம­தி­யாகும் அலு­மி­னியம், உருக்கு என்­ப­வற்றின் இறக்­கு­ம­தியை தற்­கா­லி­க­மாக தடை­செய்தார்.

பின்னர் 50 பில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான சீன இறக்­கு­மதிப் பண்­டங்­க­ளுக்கு தீர்­வையை அதி­க­ரித்தார். தீர்­வையை அதி­க­ரிக்கும் போது இறக்­கு­ம­திக்­கான டொலர் செலவு வீழ்ச்­சி­ய­டையும் என்ற கார­ணத்தால் தீர்­வையை அதி­க­ரித்தார். சீனாவும் பதி­லடி கொடுத்­தது சீனா 5 பில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான அமெ­ரிக்க ஏற்­று­மதி பண்­டங்கள் மீது தீர்­வையை அதி­க­ரித்­தது. சீனப் பொரு­ளா­தா­ரத்தில் அமெ­ரிக்க உற்­பத்­தி­யா­ளர்கள் தங்­கு­த­டை­யின்றி முத­லீடு செய்து உற்­பத்தி, வர்த்­த­கத்தில் ஈடு­பட சீனா அனு­ம­திக்க வேண்டும். அவ்­வாறு சீனா அனு­ம­தித்தால் அமெ­ரிக்­காவின் வர்த்­தக மீதி பாத­க­மான நிலையில் முன்­னேற்றம் ஏற்­படும் என்­பதே அமெ­ரிக்க தரப்­பி­னரின் நிலைப்­பாடு ஆகும். ஆனால் சீனா, அமெ­ரிக்க கம்­ப­னிகள் சீன கம்­ப­னி­க­ளுடன் கூட்­டாக இணைய வேண்டும் எனவும், குறிப்­பாக கன­ர­க­வா­கன உற்­பத்தித் துறையில் இவ்­வா­றான நிலைப்­பா­டு­க­ளுடன்  சீன கம்­ப­னிகள் Intellectual Property Rights  எனக் கூறப்­படும் புல­மைச்­சொத்து உரி­மை­களை கள­வா­டு­வ­தாக அமெ­ரிக்க தரப்பு கூறு­கி­றது.  ஒரு நாடு ஏதா­வது உற்­பத்­தியில் சிக்­கனம், தரம், நீடிப்புத்தன்மை  காணப்­பட்­டாலே அப்­பண்டம் சர்­வ­தேச சந்­தையில் போட்­டி­போட முடியும்.

அண்­மைய சகாப்­தங்­களில் ஜப்­பானின் அசாத்­திய பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கு புதிய விஞ்­ஞான கண்­டு­பி­டிப்­புக்கள், புத்­தாக்­கமே பின்­ன­ணி­யாகும். உற்­பத்தி இர­க­சியம் ஜப்பான் நாட்­டுக்கு சொந்தம். அத­னையே புல­மைச்­சொத்து உரிமை எனக்­கூ­றப்­ப­டு­கின்­றது. சீனா, இந்­தியா ஆகிய நாடு­களும் கண்­டு­பி­டிப்பு, புத்­தாக்கம் ஆகி­ய­வற்றில் முன்­னேற்­ற­க­ர­மான நாடு­க­ளாகும். அமெ­ரிக்கா விஞ்­ஞானம், தொழில்­நுட்பம் ஆகி­ய­வற்றால் மிகவும் முன்­னே­றிய நாடா­ன­ப­டியால் பல உற்­பத்தி இர­க­சி­யங்கள் அமெ­ரிக்க கம்­ப­னி­க­ளிடம் உண்டு. சீனா, அமெ­ரிக்க உற்­பத்தி இர­க­சி­யங்­களை கள­வா­டு­வ­தாக அமெ­ரிக்கா குற்றம் சாட்­டு­கி­றது. சீனா இக்­குற்­றச்­சாட்டை மறுக்­கின்­றது.

நாடு­களுக்­கி­டையே வர்த்­த­கத்தை நெறிப்­ப­டுத்தும் உலக நிறு­வனம் WTO எனப்­படும் உலக வர்த்­தக அமைப்­பாகும்.  WTO ல் அங்கம் வகிக்கும் நாடு­க­ளுக்­கி­டையே ஏற்­படும் வர்த்­தகப் பிணக்­கு­களை தீர்த்து வைப்­பதும் WTO ஆகும்.  அது மட்­டு­மல்ல விளை­யாட்­டு­க­ளுக்கு சட்டம் விதி­மு­றைகள் இருப்­பது போன்று சர்­வ­தேச வர்த்­தக நட­வ­டிக்­கைக்கும் சட்டம் விதி­மு­றை­கள WTO வினால் நெறிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.  உதா­ர­ண­மாக இலங்­கையோ வேறு எந்­த­ஒரு நாடோ இந்­னொரு நாட்­டுடன் சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டு­வ­தனால் WTO வின் வழி­காட்டல் அவ­சி­ய­மா­கின்­றது.  அமெ­ரிக்க – சீன வர்த்­தக போரில் WTO சம்­பந்­தப்­படும் நிலமை மோச­ம­டை­ய­வில்லை.  இரு­த­ரப்பும் ஏட்­டிக்குப் போட்­டி­யாக விதிக்கும் தீர்வை வரிகள் (Tariffs) WTO  விதித்த தீர்வை  மட்­டங்­க­ளுக்குள் இருப்­ப­தனால்  இரு நாடு­களும் சட்ட விதி­மு­றை­களுக்­குள்­ளேயே போட்­டியை நடாத்­து­கின்­றன.  

பங்­குனி 2018ல் அதிபர் ட்ரம்­பினால் ஆரம்­பித்­து­வைக்­கப்­பட்ட வர்த்­தகப் போட்­டியில் பல வரி, தீர்வை அறி­வித்­தல்­களை இரு நாடு­களும் மாறி மாறி அறி­வித்­தன. தற்­போது அமெ­ரிக்க அதிபர் சில மட்­டுப்­ப­டுத்­தல்­களை அறி­விக்­க­வி­ருக்­கிறார் என சில தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. அமெ­ரிக்­காவில் சீன முத­லீ­டு­க­ளுடன் செயற்­படும் அமெ­ரிக்­கா கம்­ப­னிகளை மட்­டுப்­ப­டுத்­தவும், அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து சீனா­வுக்கு ஏற்­று­ம­தி­யாகும் அமெ­ரிக்கத் தொழில்­நுட்­ப­வியல் ஏற்­று­ம­தி­களை மட்­டுப்­ப­டுத்­தவும் மற்றும் அமெ­ரிக்­காவில் கைத்­தொழில் ரீதியில் சிறப்பு வாய்ந்த தொழில்­நுட்­ப­வியல் கம்­ப­னி­களில் எந்த அமெ­ரிக்க கம்­ப­னியும் சீன முத­லீ­டு­களை  25%  மேற்­பட அனு­ம­திக்­கக்­கூ­டாது என்ற மட்­டுப்­ப­டுத்­தல்­க­ளையும் அமெ­ரிக்க அதிபர் பிர­க­ட­னப்­ப­டுத்­தலாம் என கூறப்­ப­டு­கி­றது. ஜனா­தி­பதி ட்ரம்பின் அச்சம் வெளிப்­ப­டை­யா­னது. தலை சிறந்த விஞ்­ஞான அபி­வி­ருத்தி உள்ள அமெ­ரிக்­காவில் ரோபோக்கள், சிப் என அழைக்­கப்­படும் நுண்­ணிய தொழில்­நுட்­ப­வியல் சாத­னங்கள் அமெ­ரிக்­காவின் பொரு­ளா­தார உற்­பத்­திக்கு கார­ண­மா­னவை. அந்த நுட்ப ரக­சி­யத்தை இன்­னொரு நாடு பெற்று தமக்கு இரா­ணு­வ­ரீ­தி­யா­கவும்  பொருளாதார ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் போட்டியாளர்களாக உருவாகுவதை எவரும் விரும்பமாட்டார்கள்.

எனினும் ட்ரம் சத்தம் போடுவாரே அல்லாமல் அவரின் சத்தம் சத்து அற்றது எனவும் அவரைப்பற்றிய கருத்து நிலவுகின்றது. ட்ரம்மின் எத்திட்டமும் சீனாவை அசைக்கப் போவதில்லை என சில அமெரிக்கப் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அத்துடன் அமெரிக்கா அதிசக்தி வாய்ந்த தொழில்நுட்பவியல் உற்பத்திக் கம்பனிகளில் சீன முதலீடு குறைந்த மட்டத்தில் காணப்படுகிறது. சீன அமெரிக்கத் தொழில்நுட்பவியலை திருடுகின்றது என்ற குற்றச்சாட்டு ஏற்க முடியாது என்றும் அமெரிக்க அதிபரின் மட்டுப்படுத்தல்களும் சீனப் பண்டங்கள் மீதும் வரித் தீர்வை விதிப்பதும் அமெரிக்க பொருளாதாரத்தையே பாதிக்கும். சீனா எந்நிலையிலும் பாதிப்புக்குள்ளாகமாட்டாது எனவும் சில அமெரிக்க அறிஞர்கள் வாதாடுகின்றனர். குறிப்பாக மைக்குரோசொப்ற், கூகுள் போன்ற நிறுவனங்களில் சீன முதலீடு குறைந்த மட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பொருளாதாரத்தை நிமிர்த்தும் முயற்சியில் பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அமெரிக்க அதிபர் அரசியல் இராணுவப் பொருளாதார ரீதியாக நட்புநாடுகளாக விளங்கும் ஐரோப்பிய நாடுகள், கனடா போன்றவற்றுடனான இருதரப்பு வர்த்தகத்திலும் சில தீர்வைகளை அறிவித்துள்ளனர். அதன் காரணமாக ஐரோப்பியத் தலைவர்களுக்கும் கனடா பிரதமருக்கும் அமெரிக்காவுடன் சற்று அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் இந்நாடுகளிலிருந்து அலுமினியம் உருக்கு உற்பத்தி இறக்குமதிகளுக்கு தீர்வைகளை அதிகரித்துள்ளார். சீனாவுடன் தொடுக்கப்பட்ட அமெரிக்க அதிபரின் வர்த்தகப்போர் பாரம்பரிய கூட்டணி நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, சுவிற்சர்லாந்து, கனடா ஆகிய நாடுகளுக்கு விஸ்தரிக்கப்பட்டமை அமெரிக்கா உலகின் ஏக வல்லரசு, அதி சக்தி வாய்ந்த நாடு என்கின்ற அந்தஸ்துக்கு ஊறு விளைவித்துள்ளது எனக் கொள்வது தவிர்க்க முடியாதுள்ளது.  

(ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்)