பதக்கம் வென்ற வீர, வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி பாராட்டு

Published By: Daya

30 Jun, 2018 | 09:20 AM
image

2018 ஜூன் மாதம் ஜப்பானின் ஜிபு நகரத்தில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டின் கனிஷ்ட ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற இலங்கை வீர, வீராங்கனைகள் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். 

குறித்த விளையாட்டு விழாவில் 03 தங்கப் பதக்கங்களையும் 04 வெள்ளிப் பதக்கங்களையும் 02 வெண்கலப் பதக்கங்களையும் இலங்கை விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பெற்றுக்கொண்டனர். இவர்களது திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி அவர்களது எதிர்கால முன்னேற்றத்திற்காக தனது ஆசீர்வாதங்களை வழங்கினார்.

விளையாட்டு துறையிலுள்ளவர்களை வலுவூட்டி அவர்களின் எதிர்கால பயணத்திற்கும் விளையாட்டு துறையின் முன்னேற்றத்திற்கும் அரசாங்கம் அனைத்து வசதிகளையும் வழங்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் போஷாக்கு நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் ஏனைய வசதிகளை வழங்குவதற்கும் அனுசரனையை வழங்குவதற்கு பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் முன்வந்துள்ளன. 

விளையாட்டு துறைக்கு அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் அந்த அனுசரணைக்கேற்ப வரி நிவாரணங்களை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி அமைச்சரவையுடன் கலந்துரையாடி அந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இலங்கைக்கு பதக்கங்களை வெற்றிகொள்வதே முக்கிய நோக்கமாகும். இந்த வீர, வீராங்கனைகளை பாராட்டுவதன் மூலம் மெய்வல்லுனர் போட்டிகளில் ஈடுபடுகின்றவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்றும் மெய்வல்லுனர் போட்டிகளுக்கு நாட்டில் புதியதோர் எழுச்சியை ஏற்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2018ஆம் ஆண்டு கனிஷ்ட ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்ற அக்குரம்பொட வீரகெப்பெடிபொல மத்திய மகா வித்தியாலயத்தின் எஸ்.அருண தர்ஷன, குருணாகலை மலியதேவ கல்லூரியின் பீ.எம்.பீ.எல்.கொடிகார, கொழும்பு புனித பெனடிக் கல்லூரியின் கே.பி.பீ.ஆர்.ரவிஷ்க இந்திரஜித், கொழும்பு நாலந்தா கல்லூரியின் ஜீ.டி.கே.கே. பபசர, குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியின் பாரமி வசந்தி மாரிஸ்டெலா, வளல ஏ. ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயத்தின் கே.ஜி.தில்ஷி குமாரசிங்க, கண்டி சுவர்ணமாலி மகளிர் கல்லூரியின் அமாஷா டி சில்வா, வத்தளை லயிஷியம் சர்வதேச பாடசாலையின் சசினி தாரக்கா திவ்வியாஞ்சலி, நுகேகொட லயிஷியம் சர்வதேச பாடசாலையின் ருமேஷா இசாரா அத்திடிய ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் அதிகாரிகள், பதக்கங்களை வென்ற விளையாட்டு வீர, வீராங்கனைகளின் பெற்றோர், பாடசாலை அதிபர்கள், பயிற்றுவிப்பாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10