யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் சிறுமி படு‍கொலை செய்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டவர்கள் 17, 18 வயதுடையவர்களாவார்கள்.  அத்துடன் இவர்களை இன்று மல்லாகம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுமுள்ளனர்.

இந் நிலையில் சம்பவம் தொடர்பில் இதுவரை மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த வட்டுக்கோட்டை பொலிஸார், தொடர்ந்தும் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.