"அழுத்தங்களை தொடர்ந்தும் பிரயோகிப்போம்"

Published By: Vishnu

30 Jun, 2018 | 07:18 AM
image

ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கி­யுள்­ள­போ­திலும் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் இலங்கை அர­சாங்­கத்­துக்­கான அழுத்­தங்­களை தொடர்ந்து பிரயோகிப்போம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் எடுத்துரைத்துள்ளார். 

வட­மா­காண முத­ல­மைச்சர்  சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனை நேற்று முன்­தினம் மாலை அமெ­ரிக்கத் தூதுவர் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார். இந்தச் சந்­திப்­பின்­போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

இதன்போது  அதுல் கெசாப் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஐ.நா.மனித உரிமைப் பேர­வை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கி­யுள்­ள­போ­திலும் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்தும் விட­யத்தில் எம்­முடன் இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யுள்­ளது. இதனால் அந்த பொறுப்­புக்­கூறும் விட­யத்­தி­லி­ருந்து இலங்கை அர­சாங்கம் நழு­வி­விட முடி­யாது. இதற்­கான அழுத்­தங்­களை தொடர்ந்தும் அமெ­ரிக்கா முன்­வைக்கும். அர­சாங்க உயர்­மட்­டத்­தி­ன­ருக்கு இவ்­வி­டயம் தொடர்பில் நாம் எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம். இதனால் பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்தும் விட­யத்தில் நாம் தொடர்ந்தும் அக்­கறை காண்­பிப்போம்.

அத்துடன் எதிர்வரும் ஜாதி­பதித் தேர்­தலில் மஹிந்த தரப்பு வெற்­றி­பெ­று­வது கடி­ன­மான காரி­ய­மா­கவே இருக்கும். மஹிந்த தரப்­பி­னரை முப்­பது வீத­மான மக்­களே ஆத­ரிப்­ப­தாகத் தெரி­கின்­றது. ஏதோ ஒரு கார­ணத்­துக்­காக ஏனைய மக்கள் அவர்­க­ளுக்கு எதி­ரா­கவே உள்­ளனர். அதற்குப் பல கார­ணங்கள் இருக்­கலாம் என்று கூறி­யுள்ளார். 

மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஒரு அமெரிக்க பிரஜையாவார். அமெ­ரிக்க பிர­ஜை­யா­க­வுள்ள ஒருவர் அந்தப் பிர­ஜா­வுரி­மையை இரத்துச் செய்­ய­வேண்­டு­மானால் அதற்­கான சட்­ட­திட்­டங்கள் உள்­ளன. அவ்­வா­றான நிலையில் அந்த சட்­ட­திட்­டங்­களில் அமெ­ரிக்க அதி­கா­ரிகள் தலை­யிட முடியும் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இந்த சந்­திப்­பின்­போது இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் உரிய விசா­ர­ணை­யினை நடத்­தக்­கோரும் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் பிரே­ரணை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாமை தொடர்பில் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் கவலை தெரி­வித்­துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01