தெஹிவளை ஸ்ரீமத் அநாகரிக தர்மபால மாவத்தையில் நிர்மாணிக்கப்படும் கட்டடத்திலிருந்து கீழே விழுந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் 39 மற்றும் 40 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.

குறித்த கட்டடத்தில் மின்சார இணைப்பு பணிகளை மேற்கொண்டிருந்த போது அவர்கள் இருவரும் கீழே விழுந்து விபத்திற்குள்ளான நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.