சமயல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

இதற்கிணங்க 12.5 கிலோகிராம் சமயல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 138 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. 

கடந்த ஏப்பரல் மாதம் 248 ரூபாவால் அதிகரித்த சமயல் எரிவாயுவின் விலையானது இன்று நள்ளிரவு முதல் 138 ரூபாவால் குறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.