இலங்கையில்  இடம்பெறும் கட்டுமானப்பணிகள் 40 வீதமானவற்றை சீனாவை சேர்ந்த நிறுவனங்களே முன்னெடுக்கின்றன என இலங்கை கட்டுமான நிலையம்  தெரிவித்துள்ளது.

இலங்கை கட்டுமான நிலையத்தின் தலைவர் ரொகான் கருணரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த மூன்று வருடங்களில் இதனை 70 வீதமாக அதிகரிப்பதற்கு சீனா விரும்புகின்றது இது இலங்கை நிறுவனங்களிற்கு பாதிப்பாக அமையலாம்  என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக சீனாவின் சர்வதேச ஒப்பந்தக்காரர்கள் சங்கம் இலங்கையில் முன்னெடுக்கும் அனைத்து கட்டுமானத்திட்டங்களையும் இலங்கை நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என ஓப்பந்தம் செய்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து வெளிநாட்டு கட்டுமான நிறுவனங்களும் எதிர்காலத்தில் உள்ளுர் நிறுவனங்களுடன் என்பதை உறுதிசெய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் எனவும் ரொகான் கருணரட்ன தெரிவித்துள்ளார்.