மட்டக்களப்பு - கரடியனறு பொலிஸ் பிரிவிலுள்ள காயங்குடா பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில்  தேக்குமர  குற்றிகளை வாகனத்தில் ஏற்றிவந்த மூவரை  நேற்று கைது செய்ததாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து  சம்பவதினமான  நேற்று இரவு 8 மணியளவில் குறித்த பிரதேசத்தில் கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சமரக்கோன் தலைமையிலான பொலிஸ் குழு காட்டில் இருந்து.

சட்டவிரோதமாக தேக்குமரங்களை வெட்டி அதன் குற்றிகளை வாகனத்தில் எடுத்து வந்தபோது அதனை நிறுத்தி மரக்குற்றிகளை எடுத்துவந்த  மூவரை கைது செய்ததுடன்  வாகனத்தையும் மரக்குற்றிகளையும் மீட்டுள்ளனர். 

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் சம்மாந்துறையைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .