மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி பாம் கொலனி பிரதேசத்தில் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 14, 15 வயது சிறுவர்கள் இருவரை  இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் கடந்த 12 ஆம் திகதி ஆடுகளை மேக்கச் சென்ற 12 வயது சிறுமியை அதே பிரதேசத்தைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயது சிறுவர்கள் அவரை பின்தொடர்ந்து சனநடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல்  துஷ்பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கபபட்ட சிறுமி பயம் காரணமாக வெளியில் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ள நிலையில் தனக்கு ஏற்பட்ட விபரீத நிலை தொடர்பாக நேற்று வியாழக்கிழமை (28) தெரிவித்ததையடுத்து உறவினர்கள் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிசார் சந்தேகத்தின் பேரில் 14,15 வயதுடைய இரு சிறுவர்களை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர் .