மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹன விஜயவீரவை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு அவரின் மனைவி ஸ்ரீமதி சித்ராங்கனி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில் சட்டமா அதிபர் உள்ளிட்ட 11 பேர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி உலபனே பிரதேசத்தில் ரோஹன விஜயவீர கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தனது கணவர் இது வரை உயிருடன் இருக்கிறாரா? இல்லையா என்பது தொடர்பில் சட்டரீதியாக இது வரை அறிவிக்கப்படவில்லை எனவும் எந்தவொரு நீதி மன்றிலும் தனது கணவரை ஆஜர் செய்யவுமில்லை எனவும் சித்ராங்கணி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது கணவருக்கு நேர்ந்தது என்னவென்று தெரியாமல் தவிப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.