சீனா இராணுவம் இலங்கைக்குவராது- ரணில்

Published By: Rajeeban

29 Jun, 2018 | 03:21 PM
image

எம்.எம்.மின்ஹாஜ்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமையினால் சீனாவின் இராணுவம் ஆக்கிரமிக்கும் என பலர் கூறுகின்றனர். என்றாலும் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வணிக நோக்குடனே வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அதனால் சீன இராணுவம் இலங்கைக்கு வராது . அதன் ஆதிக்கமும் இருக்காது . எமது பாதுகாப்பு படையே அங்கு முகாமிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்

சீரழிந்த நாட்டை நாம் பொறுப்பேற்று ஜனநாயகம்  மனித உரிமை நிலை நாட்டினோம். இதன்ஊடாக இலங்கைக்கு இருந்த பிரதான சவாலை வெற்றிக்கொண்டோம். அதனை அடுத்து பொருளாதார ரீதியான சவால்களை வெற்றிக்கொள்ள முயற்சித்து வருகின்றோம். 

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும். இந்து சமுத்திரத்தின் மையமாக இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொருளாதார துறையில் முன்னேற்றம் காண வேண்டும். இதன்ஊடாக வெளிநாட்டு முதலீடுகளை நாம் அதிகரிக்க வேண்டும். ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க வேண்டும். ஆகவே இதற்கு தனியார் துறையின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். 

அத்துடன் அம்பாந்தோட்டை துறைமுகத்தை தற்போது சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளோம். நீர் தடாகமாக இருந்த துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமையின் ஊடாக வளர்ச்சி அடைந்த துறைமுகமாக அதனை மாற்றி அமைக்கவுள்ளோம். அம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி தற்போது கப்பல் வர ஆரம்பித்துள்ளன. அடுத்த வருடமாகும் போது இயக்கத்துடன் கூடிய துறைமுகமாக அது மாற்றம் காணும். 

என்றாலும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமையினால் சீனாவின் இராணுவத்தினர் இலங்கை வந்தால் என்ன நடக்கும் என என்னிடம் ஒரு சிலர் தனிப்பட்ட ரீதியிலும் கேட்டனர்.அதற்கு அப்படி நடக்காது என்று கூறினேன். 

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வணிக நோக்குடனே வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அதனால் சீனா இராணுவம் இலங்கைக்கு வராது . தெற்கில் கடற்படை தளம் அம்பாந்தோட்டையில் அமைக்கப்படும். ஆகவே எமது பாதுகாப்பு படையினரே துறைமுகத்தில் முகாமிடுவர். சீனாவின் இராணுவத்தினால் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஆகவே இந்த விடயத்தில் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08