மாத்தறையில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஹபரகட வசந்தவின் தாய் மற்றும் தந்தை உட்பட நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறையில் அண்மையில் நகைக் கடையொன்றில் கொள்ளையிட்டுவிட்டு தப்பிச்சென்று தலைமறைவாகியிருந்த ஹபரகட வசந்த என்ற சந்தேகநபரின் வீட்டினை சோதனையிட்ட விசேட அதிரடிப்படையினர் அங்கிருந்து ரிவோல்வர் மற்றும் துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ள நிலையில் அவரது மனைவியையும் பொலிஸார் கைதுசெய்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளையடுத்து ஹபரகட வசந்தவின் தாய் மற்றும் தந்தை உட்பட நால்வரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, ஹபரகட வசந்த மறைத்து வைத்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை தங்கங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.