சீனாவில் ஷங்காய் நகரில் உள்ள ஆரம்பப்பாடசாலையில் மாணவர்கள் மீது நடத்திய கத்திக்குத்து தாக்குததில் 2 மாணவர்கள் பலியாகியுள்ளனர்.

சீனாவின் ஷாங்காய் நகரத்துக்கு உட்பட்ட சூகுய் மாவட்டத்தில் உள்ள ஆரம்பப்பாடசாலை ஒன்றின் வாசலில் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு 3 மாணவர்களையும், ஒரு மாணவரின் தாயாரையும் ஒரு மர்ம நபர்  கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். 

உடனடியாக அவர்கள் அங்கு இருந்து மீட்கப்பட்டு,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் 2 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததோடு. எஞ்சிய ஒரு மாணவரும் குறித்த தாயும் தொடர்ந்து சிகிச்கை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தாக்குதல் நடத்திய நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இந்த சம்பவம், ஷாங்காய் பகுதியில் உள்ள பெற்றோர்களிடமும், மாணவ, மாணவிகளிடமும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.