பாடசாலைக்கு சமுகமளிக்காத 20 மாணவர்கள் இன்று காலை ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள தாளங்குடா வேடர்குடியிருப்பில் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சியின் வழிகாட்டலில் தாளங்குடா நடமாடும் பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி ஜே.எம்.மதுசங்க தலைமைமையிலான பொலிஸார் ஆரையம்பதி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து வீடு வீடாக நடாத்திய தேடுதலில் பாடசாலைக்குச் சமுகமளிக்காது வீடுகளில் முடங்கியிருந்த 20 மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது பெற்றோரும் அறிவுறுத்தப்பட்டனர்.

மாணவர்களது பாடசாலை புத்தகங்கள் அப்பியாசக் கொப்பிகளும் பரிசோதிக்கப்பட்டன.

குறித்த மாணவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைக்கு சமுகமளிக்காவிட்டால் பெற்றோர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த தேடுதல் நடவடிக்கை தொடருமென பொறுப்பதிகாரி மதுசங்க மேலும் தெரிவித்தார்.