ஜேர்மனின் பிரபல பாடகி ஹோசன் கேன் என்பவர் தீவிரவாத இயக்கத்தின் உறுப்பினராக இருந்து அதனை ஊக்குவிக்கும் செய்களில் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குர்திஷ் மக்கள் ஜனநாயகக் கட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு, தீவிரவாத இயக்கத்தின் உறுப்பினராக இருந்து கொண்டு தீவிரவாத செயல்களை நாட்டில் பரப்பிவிடுகிறார் என துருக்கி அரசாங்கம் ஹோசன் கேன்னை கைது செய்துள்ளது.

மேலும் யாஸிதி மக்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் கையில் ஆயுதம் ஏந்தியிருந்த நிலையில் அவர்களுடன் இணைந்து கேன் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார்.

துருக்கியில் கேன்  கைது செய்யப்பட்டதை அறிந்துக் கொண்ட ஜேர்மன் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் ஜேர்மன் வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.