பொலன்னறுவை பொசன் தின நிகழ்வுகளுடன் இணைந்ததாக வரலாற்று முக்கியத்துவமிக்க கல்விகாரையை மையப்படுத்தி இடம்பெறும் புனித சின்னங்களை காட்சிப்படுத்தல் இரண்டாவது நாளாகவும் நேற்று பிற்பகல் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. 

இந்த புனித சின்னங்கள் கண்டி நெல்லிகலை சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. சங்கைக்குரிய பல்லேவெல ரத்னபால தேரரினால் சமயக் கிரியைகள் நடத்தப்பட்டதுடன், நெல்லிகலை சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தின் தலைவர் யட்டி ஹலகல ரஜமகா விகாரையின் சங்கைக்குரிய வத்துரகும்புரே தம்மரத்தன நாயக்க தேரரினால் விசேட அனுசாசன உரை நிகழ்த்தப்பட்டது. 

சங்கைக்குரிய லியன்கஸ்வகுரே தேவானந்த நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். பொலன்னறுவை நகராதிபதி ஷானக சுதத் ரனசிங்க, சத்துரிக்கா சிறிசேன உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் இங்கு வருகை தந்திருந்தனர். 

பொசன் தின நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக இடம்பெறும் புனித சின்னங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வு இம்மாதம் 27, 28, 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பொலன்னறுவை கல்  விகாரையில் இடம்பெறுகின்றது.