சுழிபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி றெஜீனாவுக்கு நீதி கோரி இன்றைய தினமும் சுழிபுரம் சந்தி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் இன்றை தினம் வடக்கில் முழு நிர்வாக போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் வழமையான சூழ்நிலையே காணப்படுகிறது. 

நேற்றைய தினம் இச் சம்பவத்தை கண்டித்து யாழ்ப்பாணத்திலிருந்து காரை நகர் செல்லும் வீதியை மறித்து சுழிபுரம் காளுவன் சந்தியில் பொதுமக்கள், பெற்றோர், பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

இதன் தொடர்ச்சியாகவே இன்றைய தினமும் சுழிபுரம் பகுதியில் போராட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.