நைஜீரியாவின் லாகோஸ் நகரில் எண்ணெய் ஏற்றி சென்ற லொறியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி ஒன்பது பேர்  உயிரிழந்தனர். 

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நேற்று மாலை எண்ணெய் ஏற்றி சென்று கொண்டிருந்த லொறியொன்று எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகியது. இதனால் அந்த லாரியில் இருந்த எண்ணெய் கசிந்து தீ பற்ற தொடங்கியது. 

சிறிது நேரத்தில் அந்த தீ அருகில் இருந்த வாகனங்களுக்கும் வேகமாக பரவியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 5 பஸ்கள், 2 டிரக் வண்டிகள் மற்றும் 45 கார்கள் தீக்கிரையாகியாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய லொறியின் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.