கிளிநொச்சி பழைய வைத்தியசாலை வளாகத்திலுள்ள பல்லாண்டுகள் பழைமைவாய்ந்த ஆலமரம் ஒன்றினை வெட்டி அழிப்பதற்கு பிராந்திய சுகாதார திணைக்களத்தினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பழைய வைத்தியசாலையின்  அருகாமையில் காணப்படும் ஆலமரத்திற்கே இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது.

 மேற்படி கட்டடங்களுக்கு அபாயம் நேரிடலாம் என்ற கோதாவில் மிகவும் தந்திரமான முறையில் இந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. 

2009 க்கு முன் குறித்த ஆலமரத்திற்கு  அருகில் அமைக்கப்பட்ட கட்டடங்கள் மரத்தை மையமாக வைத்தே அமைக்கப்பட்டது.   இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கு அரசும் அரசார்பற்ற  தன்னார்வ நிறுவனங்களும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற   நிலையில் சுகாதர திணைக்களத்தின் குறித்த நடவடிக்கையானது சூழலியலாளர்கள் மத்தியில் கவலையினையும், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.