ஹார்லி டேவிட்சனுக்கு எச்சரிக்கை விடுக்கும் ட்ரம்ப்!!!

Published By: Digital Desk 7

29 Jun, 2018 | 09:32 AM
image

இருமுனை வரி நெருக்கடியால் அமெரிக்காவை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ள உலகின் முன்னணி  ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டர் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவுக்கு எதிராக உலக நாடுகள் வர்த்தக போரை தொடங்கியுள்ள நிலையில்  இந்தியாவும், சீனாவும் தற்போது வர்த்தக அளவில் ஒன்றாக செயல்படும் வகையில் வரிகளை குறைப்பதாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதோடு அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை அதிகரித்துள்ளன. இதனால் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலகின் முன்னணி இருசக்கர மோட்டார் வண்டி தயாரிப்பு நிறுவனமான  ஹார்லி டேவிட்சன்  அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவருகிறது.

இந்நிறுவனம் இரும்பு, அலுமினியம் போன்ற மூலப்பொருட்களுக்கு அதிக வரி செலுத்தி இறக்குமதி செய்கிறது. தற்போது தயாரித்த இருசக்கர மோட்டார் வண்டிகளை ஏற்றுமதி செய்ய கூடுதல் வரியை செலுத்த வேண்டிய நிலை அந்நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது. இருமுனை வரி நெருக்கடியால் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அமெரிக்காவில் இருந்து வெளியேற இருப்பதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அறிவித்தது. அத்தோடு ஆசியா அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கு தனது நிறுவனத்தை மாற்றவுள்ளதாகவும் கூறியுள்ளது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இந்த முடிவினால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.., 

அமெரிக்காவில் இருந்து ஹார்லி டேவிட்சன் நிறுவனம் வெளியேற கூடாது என்றும், அந்த நிறுவனத்திற்காக அமெரிக்க அரசு நிறைய செய்துள்ளதாகவும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ட்ரம்ப்பின் கோரிக்கையை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் மறுபரிசீலனை செய்ய தயாராக இல்லை என கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07