‘கழுகு 2’ படத்தின் ஷூட்டிங் மூணாறில் இன்று தொடங்கியது.

தமிழ் சினிமாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பேய் ஆட்சி செய்து கொண்டிருந்தது. தற்போது வெற்றிப் பெற்ற படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்குவது டிரெண்ட்டாகி வருகிறது.

வெண்ணிலா கபாடி குழு=2, அப்பா=2, தமிழ் படம்=2, நாடோடிகள்=2, களவாணி=2, மாரி=2, விஸ்வரூபம்=2, சாமி=2, எந்திரன் 2.0 என இந்த பட்டியல் நீள்கிறது. இந்த வரிசையில் கிருஷ்ணா, பிந்துமாதவி நடிப்பில் 2012 ஆம் ஆண்டில் வெளியாகி வெற்றிப் பெற்ற கழுகு படமும் இடம்பிடித்திருக்கிறது. 

கழுகு=2 படத்தின் படபிடிப்பு இன்று மூணாறில் பூஜையுடன் தொடங்கியது. இதில் நாயகன் கிருஷ்ணா, நாயகி பிந்து மாதவி, நடிகர் காளி வெங்கட் , இயக்குநர் சத்ய சிவா, தயாரிப்பாளர் திருப்பூர் கணேசன், விநியோகஸ்தர் சிங்காரவேலன், ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர்  ராஜா இசையமைக்க, கோபி கிருஷ்ணா படத்தை தொகுக்கிறார்.