(எம்.எம்.மின்ஹாஜ்)

மாகாண சபை தேர்தல் தொடர்பாக சபாநாயகர் கருஜசூரியவுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது மாகாண சபை தேர்தலை தாமதிக்காமல் உடன் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பாராளுமன்றம் ஒத்துழைக்க வேண்டும் என மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியதையடுத்து தேர்தலை உடன் நடத்துவதற்கு பாராளுமன்றம் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கும் என சபாநாயகர் கருஜயசூரிய பதிலளித்தார்.

அத்துடன் மாகாண சபை தேர்தல் தொடர்பாக எதிர்வரும் ஜூலை மாதம் 05 ஆம் திகதி சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் ஒன்றை நடத்தவும் இங்கு தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.