(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணம் மானிப்பாய் லோடஸ் வீதியில்  ஆறுபேர் கொண்ட கும்பல் முகத்தில் துணி கட்டிக் கொண்டு இரு வீடுகள் மீதும் அங்கிருந்தவர்கள் மீதும் மேற்கொண்ட தாக்குதலில் மூவர்  காயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள் மற்றும் உடமைகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது.

மானிப்பாய் லோடஸ் வீதியைச் சேர்ந்த  பத்மராசா என்பவரது மகனான தனுயன்  என்பவரைத் தேடி அவரது வீட்டுக்குள் சென்று வீட்டின் முன்பாக இருந்த மோட்டார் சைக்கிளை  பெற்றோல் ஊற்றி கொழுத்தி மற்றும் வீட்டு யன்னல் கதவுகளை சேதபடுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதேபோல் தனுயன் மறைந்திருக்கலாம் என்ற சந்தோகத்தில் அவரது நண்பரின் வீட்டுக்குள் சென்றும்  இருவரை வாளால் வெட்டி காயம் விளைவித்து பொருட்களையும் அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்கள்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாரிடம் முறையிடச் சென்றபோது முறைப்பாடு எடுப்பதற்கு ஆட்கள் இல்லை எனத் தெரிவித்து பின்னர் வருமாறு கூறியுதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தார்கள்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன் பகைகாரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதற்குமுன்னரரும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றுது. இதேவேளை குறித்த நபரும் இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டு சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றில் உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.