ஐ.நா.சபையின் இலங்­கைக்­கான 20 பரிந்­து­ரை­களில் எவ்­வி­ட­யத்­தையும் நீக்க வேண்­டுமென்ற பேச்­சுக்கே இட­மில்லை. 

அவை­ஒவ்­வொன்­றையும் எவ்­வாறு நிறை­வேற்ற முடி­யு­மென்ற ஆலோ­ச­னை­க­ளையே கட்­சிகள் முன்­வைக்க வேண்­டு­மென வெளி­வி­வ­கார அமைச்சர் தெரிவித்துள்ளதாக யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் கூறினார்.

ஐ.நா.சபையின் தீர்­மானம் தொடர்பில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஜனா­தி­ப­தியால் கூட்­டப்­பட்ட இரண்­டா­வது சர்­வ­கட்சி மகா­நாட்டில் பேசப்­பட்ட விடயம் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்,

ஒக்­டோபர் மாதத்தில் கூட்­டப்­பட்ட முத­லா­வது சர்­வ­கட்சி மகா நாட்­டுக்குப் பிறகு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஜனா­தி­ப­தியால் நாம் அழைக்­கப்­பட்­டி­ருந்தோம். எழுத்து மூல ஆலோ­ச­னை­களை ஒவ்­வொரு கட்­சியும் சமர்ப்­பிக்க வேண்­டு­மென முத­லா­வது மகா நாட்டில் ஜனா­தி­பதி கேட்­டுக்­கொண்­ட­தற்கு ஏற்ப அனைத்து தரப்­பி­ன­ரது அபிப்­பி­ரா­யங்­களும் தீர்­மா­னங்­களும் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்­னாண்டோவினால் ஜனா­தி­பதி தலை­மையில் நடை­பெற்ற மேற்­படி கூட்­டத்தில் வாசித்துக் காட்­டப்­பட்­டது.

அந்த அறிக்­கையில் சில கட்­சி தலைவர்கள் ஐ.நா.சபையின் தீர்­மா­னத்­துக்கு தமது எதிர்ப்பைத் தெரி­வித்­தி­ருந்­தார்கள். மற்றும் சிலர் ஐ.நா.சபை தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டு­மென்றும் இன்னும் சிலர் சில­வற்றை மாத்­திரம் அந்த தீர்­மா­னத்தில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டு­மென்றும். சில­வற்றை நடை­மு­றைப்­ப­டுத்த கூடா­தென்றும் கூறி­யுள்­ள­தாக, ஆளுநர் வாசித்­துக்­காட்­டினார். அதன் பின் எதை நடை­மு­றைப்­ப­டுத்­தலாம் எதை கைவி­ட­வேண்­டு­மென்ற அபிப்­பி­ரா­யங்­களை கூறி­னார்கள். அவ்­வே­ளையில் நான் குறுக்­கிட்டு எனது கருத்தைத் தெரி­விக்­கையில், நாம் பேச­வேண்­டிய விட­யத்­துக்கு ஒரு அடிப்­படை இருக்க வேண்டும். ஐ.நா.சபையில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­ன­மா­னது வேறு ஒரு நாட்­டி­னாலோ, இன்­னு­மொரு நப­ரி­னாலோ நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­ன­மல்ல.

இலங்கை அர­சாங்­கமே, முன்­மொ­ழிந்து நிறை­வேற்­றிய தீர்­மா­ன­மாகும். ஆகவே தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய முழுப் பொறுப்பும் இலங்கை அர­சாங்­கத்தை சார்ந்­தது. வேறு ஒரு­வ­ரு­டைய தீர்­மா­ன­மாக இருப்பின் இது­பற்றி நாம் கருத்து முரண்­ப­டலாம். எனவே இலங்கை அர­சாங்­கத்தால் முன்­மொ­ழிந்த விட­யத்தை இலங்கை அரசே நிரா­க­ரிக்க முடி­யாது.

மேற்­படி ஒப்­பந்­தத்தைப் பொறுத்­த­வரை சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் இலங்­கை­ அ­ர­சுக்கும் இடையில் ஏற்­பட்ட ஒரு ஒப்­பந்­த­மாகும். அந்த ஒப்­பந்­தத்தை முறித்தால் பல பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­வரும்.

மஹிந்த ராஜ­பக்ஷ சர்­வ­தே­சத்­துக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற தவ­றி­யதன் கார­ண­மாக ஏற்­பட்ட பின் விளை­வு­களை நாம் அறிவோம். நிறை­வேற்ற தவறின் அதை­விட மோச­மான பின் விளை­வு­களை இலங்­கை­ அ­ர­சாங்கம் காண­வேண்­டிய நிலை ஏற்­படும்.

ஐ.நா.சபையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­ன­மா­னது இலங்கை அர­சாங்­கத்­துக்கும் தமிழ் மக்­க­ளுக்கும் இடையில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஒப்­பந்­த­மென்ற வகை­யிலும் பார்க்­கப்­ப­டலாம். ஏனெனில் இத்­தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்ட போது தமிழ் மக்கள் சார்பில் நாங்­களும் பங்­கு­பற்­றி­யி­ருக்­கிறோம். நிறை­வேற்­றப்­பட்ட விட­யங்கள் திருப்தி இல்­லாமல் இருந்த போதிலும் இது முன்­னேறிச் செல்­வ­தற்­கான முத­லா­வது படிக்கல் என்ற வகையில் கூட்­ட­மைப்­பி­ன­ரா­கிய நாம் வர­வேற்று அமுல்­ப­டுத்த எமது உத­வியை வழங்­கு­கிறோம்.
இத்­த­கைய சூழ்­நி­லையில் அது நீக்­கப்­பட வேண்டும். இவை­யில்­லாமல் ஆக்­கப்­பட வேண்­டு­மென்ற கருத்தும் அணு­கு­மு­றையும் முற்­று­மு­ழு­தாக நிரா­க­ரிக்­கப்­பட வேண்­டிய விடயம். அர­சாங்கம் இவ்­வா­றான விட­யத்தை செய்ய முற்­ப­டு­மாக இருந்தால் இது விட­யத்தில் கூட்­ட­மைப்பு எவ்­வித பங்­க­ளிப்­பையும் ஆற்ற முடி­யாமல் போய்­விடும். விலக வேண்­டிய நிர்ப்­பந்­தமும் ஏற்­ப­டலாம். இவ்­வி­டயம் தொடர்பில் சுரேஷ்­பி­ரே­மச்­சந்­தி­ரனும் ஆத­ர­வாகப் பேசினார்.

மங்கள ஆதரவு

கூட்­ட­மைப்­பி­ன­ரா­கிய எமது கருத்தை வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­க­ள­ச­மர வீர முழு­மை­யாக ஆத­ரித்து பேசினார், இந்த தீர்­மா­னத்தில் நீக்­கப்­பட வேண்­டிய விடயம் நிரா­க­ரிக்­கப்­பட வேண்­டிய விட­ய­மென்ற பேச்­சுக்கே இட­மில்­லை­யென மங்­கள தெரி­வித்தனர்.

தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. தான் இந்த தீர்­மா­னத்தை நாங்கள் ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை. நாட்டின் இறை­மைக்கு பாதகம் விளை­விக்கும் தீர்­மா­ன­மாகும். இந்த தீர்­மா­னத்தில் உள்ள நீதி­மன்றப் பொறி­மு­றை­யா­னது தெளி­வா­கவே வெளி­நாட்டு நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய ஒரு பொறி­மு­றை­யையே பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இது யாருக்கும் புரியக் கூடிய விட­ய­மென தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார்.

இவ்­வே­ளையில் ஜனா­தி­பதியும் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் கூறி­னார்கள். ஐ.நா. சபையின் விசா­ரணைத் தீர்­மா­ன­மென்­பது இலங்கை அர­சி­ய­லுக்கு உட்­பட்டே மேற்­கொள்­ளப்­ப­டு­மென்று தெரிவித்தார்.

இலங்கை அர­சி­ய­லுக்கு உட்­பட்ட வகை­யிலும் வெளி­நாட்டு நீதி­ப­தி­களைக் கொண்­டு­வ­ர­மு­டி­யு­மென்று நாங்கள் அறிந்­துள்ளோம். இதில் வெளி­நாட்டு நீதி­ப­தி­களின் வருகைக்கு இடமிருக்கிறது என தினேஷ் குணவர்த்தன எம்.பி. கூறினார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் இலங்கை அரசாங்கம் இனப்பிரச் சினைக்கான தீர்வை அவசரமாக முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள். பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனும் இதை வலியுறுத் தினார்.

ஐ.நா.சபை தீர்மானத்தில் 20, விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அவைஒவ்வொன்றையும் எவ்வாறு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற ஆலோசனைகளை கட்சிகள் முன்வைக்க வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் கேட்டுக் கொண்டார் என சுமந்திரன் தெரிவித்தார்.